எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!

Published : Dec 06, 2025, 04:47 PM IST

இதே எடப்பாடியாரை இவர் ஆஹா.. ஓஹோன்னு புகழ்ந்தாரே... நம்ம செங்கோட்டையனே புகழ்ந்தாரே... எதோ கோபத்தில் அவர் போகலாமா?

PREV
13

"எடப்பாடி பழனிசாமி ஏதோ கோபத்துல சொல்லிட்டாரு... அதுக்குனு செங்கோட்டையன் போகலாமா? எல்லாரும் அ.தி.மு.க காரன் கிடையாது" என ஆவேசமாக பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

இதுகுறித்து செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள், விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என செங்கோட்டையன் சொல்கிறாரே எனக் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘‘ ஏங்க ஒருத்தர் சொல்லி இருக்கிறார். இது மாதிரி ஆயிரம் பேர் சொல்லிட்டு வர்றாங்க. நான் கேட்டதற்காக சொல்கிறேன். புதிதாக வருகிறவர்கள் எல்லோரும் தன் தலைவரை தான் சொல்வார்கள். காக்கைக்கும் தன் குஞ்சுதான் பொன் குஞ்சு. எல்லோரும் நாங்க போய் பத்தோடு பதினொன்னா இருக்கணும்னா சொல்வாங்க. நாங்கதான் அடுத்த ஆட்சின்னு சொல்வாங்க’’ என்றார். அப்போது ஆல மரத்தில் விழுது போல் இருந்தவர், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இருந்தவர். அப்படிப்பட்டவர் போய் விட்டாரே..? என கேள்வி எழுப்பினர்.

23

‘‘ ஏங்க எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தார்னு அதையே சொல்லிக் கொண்டு இருந்தால் போதுமா? எம்.ஜி.ஆர் உருவாக்கின கட்சியை விட்டு விட்டு, இரட்டை இலை இங்கே இருக்கிறது. கட்சி அலுவலகம் இங்கே இருக்கிறது. அவர் உருவாக்கின கொடி இங்கே இருக்கிறது. 9 தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பலமுறை அமைச்சராக இருந்தார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காக தனியாகவா ஓட்டுப்போட்டார்கள்? இரட்டை இலை சின்னத்தைப்பார்த்து மக்கள் ஓட்டுப்போட்டார்கள். புரட்சிட் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அடுத்து எடப்பாடியார்.

இதே எடப்பாடியாரை இவர் ஆஹா.. ஓஹோன்னு புகழ்ந்தாரே... நம்ம செங்கோட்டையனே புகழ்ந்தாரே... எதோ கோபத்தில் அவர் போகலாமா? எனக்கு எந்தக் கட்சியும் வேணாம்யா.. எந்த படதவியும் வேணாம்யா.. எம்.ஜி.ஆர் உருவாக்கின கட்சியில் இருப்பேன்டா

அப்படின்னு சொல்றவன் தான்டா ரோசமானவன். அவன் தான் மனுஷன். அவன் தான் உண்மையான அதிமுக ரத்தம். அவனிடம்தான் அதிமுக ரத்தம் ஓடுதுன்னு அர்த்தம். சும்மா எல்லாப்பேரும் அதிமுககாரன் கிடையாது.

33

நீங்கள்லாம் பத்திரிக்கைகாரங்க தான். இந்த ஊடகங்கள்தான் தூக்கி விடுறீங்க. இன்றைக்குக்கூட ஒரு புள்ளி விவரத்தை போட்டு விட்டு இருக்காங்க. இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் நிற்குமா? என்னங்க நடக்குது நாட்ல. மக்கள் தான் எஜமான். மக்கள் என்ன நினைக்கிறாங்களோ அதுதான் நடக்கும்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories