தவெக தலைவர் விஜய் மீதான ராகுல் காந்தியின் மென்மையான போக்கும், திமுகவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ல், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி-எம்எல்ஏ-க்களுடன் டில்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிப்போம்' என்று ராகுல் காந்தியோ, காங்கிரஸ் தலைவர் கார்கேவோ வெளிப்படையாக அறிவிப்பார்கள் என திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு திமுக தலைமை வந்திருக்கிறது. இதற்காக அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2011ல் 63 தொகுதிகள், 2016ல் 41 தொகுதிகளை திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றது. ஆனால், 2021ல் சட்டமன்றட் தேர்தலில் வெறும் 25 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது.