கனிமொழி தன்னோட விருப்பத்தை கட்சி தலைமையிடம் சொல்லியும் எந்தவித பதிலும் இல்லை என்ற நிலையிலும் தனது முடிவில கனிமொழி உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள், பொங்கல் சமயத்தில் அவருக்கு வாழ்த்து சொன்னவர்கள், பதாகைகள் வைத்தவர்கள் யார் யார்? என்கிற தகவல்களை திமுக தலைமை நோட்டம் விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைப்பற்றி கனிமொழியிடம் கேட்டால், அதைப்பற்றி நீங்கள் கேட்பதற்கோ, பேசுவதற்கோ என்னிடம் எந்த பதிலும் இப்போதைக்கு இல்லை எனக் கூறி இருக்கிறார். ஆனால் டெல்லி அரசியலை விட்டு கனிமொழி வரப்போவதில்லை என கட்சி தலைமை கூறி வருகிறது. 2025 டிசம்பர் முதல் "கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்", "மாநில அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்" என்று திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. தூத்துக்குடி அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.