
முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரைச் சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கையை சமர்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் துயரச் சம்பவத்தில் இருந்து விஜய் அவ்வளவு எளிதில் ‘ஏதாவது காரணத்தைச்’ சொல்லி தப்பிக்க முடியாது என்கிறார்கள்.
கரூர் துயச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ‘இன்ச் பை இன்ச்’சாக கேள்விகளை கேட்பதுதான் டெல்லி குளிரிலும் விஜய்யை வியர்க்க வைக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
விஜய் தொடங்கிய தவெக ஏராளமான இக்கட்டுகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறது. குறிப்பாக கரூரில் நடந்த மரண சம்பவம் தவெகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் தலைமை நிர்வாகிகளான முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி என ஒட்டுமொத்தமாக எல்லாருமே தேர்தல் பணிகள் எதையுமே செய்ய முடியாமல், விஜயின் அனுமதியில்லாமல் எதையுமே பேசவும் முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தவெக முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறது.
கரூர் மரண சம்பவம் தொடர்பா தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணைக்கு டெல்லிக்கு சென்றிருக்கிறார். சிபிஐ விசாரணை வழக்கமாக மந்தமாகத்தான் நடக்கும். விரைவான முடிவைசி எடுத்து அறிவிக்க மாட்டார்கள். நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஆனால், விஜய் விவைகாரத்தில் துரிதமாக விசாரணை நடந்து வருகிறது. விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்கள். சுமார் ஏழு மணிநேரம் முதல் கட்ட விசாரணைக்கு நடிகர் விஜய் போனபோது என்ன கேள்வி கேட்பார்கள்? அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும்? என ஒரு கோப்பை தயார் செய்து சென்றுள்ளார்.
ஆனால் விசாரணைக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள், இந்த கோப்புகளை கைப்பற்றி விட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சில தவறான பதில்களை சொன்னதாக கூறப்படுகிறது. விஜய் சொன்ன தகவல்களுக்கும், கட்சி தலைமை நிர்வாகிகள் சொன்ன தகவல்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜயின் கார் டிரைவர் சில தவறான வாக்குமூலத்தையும் கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்போது இரண்டாம் கட்ட விசாரணைக்காக நடிகர் விஜய் மறுபடியும் டெல்லிக்கு போயிருக்கிறார். சிபிஐ ரகசிய விசாரணையின்போது, அவர் நேரத்தை கணக்கிட்டு சரியான நேரத்தில் ஷூட்டிங் செல்வார். எந்த படப்பிடிப்புக்குமே காலதாமதமாக போனது கிடையாது. எல்லா படப்பிடிப்புகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடுவார்.
இது தவிர வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் மிகவும் சரியான நேரத்தில் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் எதற்காக கரூர் கூட்டத்திற்கு காலதாமதமாக போக வேண்டும்? வேண்டுமென்றே கூட்டம் திரளட்டும் என நினைத்தாரா? விஜயை பொருத்தவரை கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை ரொம்ப கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரைச் சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கையை சமர்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே ஜனநாயகன் படத்துக்கும் ஏராளமான சிக்கல்கள். இப்போதைய சூழ்நிலையில் இந்தப் படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளிவரும் என்கிற நிலை. ஜனநாயகன் படத்தில் நிறைய தணிக்கை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதையெல்லாம் நீக்கிவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என தணிக்கை குழு தெரிவித்துள்ளது. தேதியை நீங்களே குறித்து விட்டு உடனடியாக நீங்களே சென்சார் செய்து தரவேண்டும் எனக் கேட்டால் என்ன நியாயம்? கட் செய்த பிறகும் படத்தை பார்க்க வேண்டும் என ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது என எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளிவரும் என்கிற சூழ்நிலை.
இதற்கிடையே தவெக தனித்துப் போட்டியிட்டால் 15 சதவீதம் வாக்குகளை தாண்டி வெற்றிபெற முடியாது என்கிற சூழ்நிலை. காங்கிரஸ், தேமுதிக என நிறைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேரும். அதன் மூலம் வெற்றி பெற்று விடலாம். இல்லையென்றால் தொங்கு சட்டசபை அமையும்போது தவெகவை தேடி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்த்தனர். ராகுல் காந்தி தன்னுடைய இறுதி முடிவாக திமுகவுடன்தான் கூட்டணி என தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கூறிவிட்டார். தேமுதிக 23ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க கூடிய மேடையில் கூட்டணி அமைத்து ஒன்றாக ஒரே மேடையில் ஏறி புதிய அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக சார்பில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை ரொம்ப தீவிரமாக நடந்து வருகிறது. ஆகையால் தவெக பொருத்தவரை வளமான கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை. ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே இப்போது தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சூழல்.
அத்தோடு தமிழ்நாடு முழுவதும்234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்துவதிலும் தவெகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.தவெக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பிரபலமாக இல்லாமலும் பணபலம் இல்லாமலும் இருக்கிறார்கள். எல்லாருக்குமே பணம் செலவு செய்வதற்கு தவெகவிக் வாய்ப்பு கிடையாது. செங்கோட்டையன் பிற கட்சிகளிடம் இருந்து நிறைய பேரை தவெகவில் இணைய வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. தினகரன் எப்படியும் தவெகவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தினகரனும் இப்போது ஏழு தொகுதிகள் பங்கீட்டு அடிப்படையில் பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். 23ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க கூடிய மேடையில் அவரும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார். இதனால், வேறு கட்சியினர் யாருமே இல்லாத சூழ்நிலை.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இந்த விசாரணை தேர்தலுக்கு முன்பே முடிந்து விடும். இதில் எந்நேரமும் விஜய் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை. இதனால், விஜய் ரொம்பவும் மன வேதனையில் ஆழ்ந்திருக்கிறார். ‘‘நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என எனக்கே தெரியவில்லை. ரொம்பவும் மோசமான சூழ்நிலை நிலவுது’’ என் தனக்கு தெரிந்த நண்பர்கள்களிடம் பேசி இருக்கிறார். இப்போது இருதலைக் கொல்லியாய் தவிக்கக்கூடிய விஜய் எந்த நேரமும் எந்த முடிவையும் அறிவிக்கலாம். இருந்தாலும் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் தமிழக முழுவதும் மிகப் பெரிய விளம்பரமும் ஏற்பட்ட சூழ்நிலையில் கட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற முடிவை அவர் எடுத்து இருக்கிறார்.
ஆனால், தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர்ந்து கட்சியை நடத்துவாரா என்பது தெரியவில்லை. தனக்கு தெரிந்த முக்கிய நண்பர்களிடம் தேர்தலுக்குப் பிறகு கட்சி குறித்து நான் முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாடில் அரசியல் செய்வது ரொம்பவும் கஷ்டமா இருக்கு என பேசி இருக்கிறார் விஜய் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.