TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?

Published : May 08, 2026, 08:50 AM IST

ஆட்சி அமைக்க 24 மணி நேரத்தில் இரண்டு முறை ராஜ்பவன் சென்றார் தளபதி விஜய். ஆனால், ஆளுநர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கேட்டதால், வெறும் கையுடன் திரும்பினார். இதனால், விஜய் சுப்ரீம் கோர்ட் செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
15
சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார் விஜய்
ஆளுநர் மாளிகையில் மே 6, 7 தேதிகளில் இரண்டு முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால், விஜய் சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார். மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியுடன் அவரது டீம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், தங்களுக்குத்தான் முதலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்பது விஜய்யின் வாதம்.
25
இந்த செய்தி தெரியுமா?
2019 மகாராஷ்டிரா தேர்தலை பலரும் இப்போது நினைவு கூர்கிறார்கள். அப்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியான பாஜக-வை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிகாலை 5:30 மணிக்கு பதவியேற்றார். ஆனால், அவரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அதேபோல, தனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என விஜய் கேட்கிறார்.
35
தற்போதைய நிலை
விஜய்யின் கட்சி 108 இடங்களில் வென்றது. ஆனால், அவர் இரண்டு தொகுதிகளில் வென்றதால், ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 107 ஆகும். ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால், பலப்பரீட்சையின் போது எண்ணிக்கை 106 ஆக குறையும். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன், மொத்த பலம் 112. பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ-க்கள் தேவை.
45
குடைச்சல் கொடுக்கும் ஆளுனர்
அரசியலமைப்புச் சட்டம் 164(1) முதலமைச்சரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, யாரை அழைப்பது என்பது ஆளுநரின் முடிவைப் பொறுத்தது. ஆளுநர் ஒரு நிலையான அரசை விரும்புவதால், 118 எம்.எல்.ஏ-க்களின் பட்டியலைக் கேட்கிறார். ஆனால், விஜய்யை அதிகாரத்தில் இருந்து தள்ள பாஜக போடும் சதி என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 1994 'எஸ்.ஆர். பொம்மை' வழக்கில், பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
55
குடியரசுத் தலைவர் ஆட்சி?
விஜய் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், தமிழ்நாட்டில் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். அப்படி நடந்தால், சட்டசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அதுவரை, ஆளுநரே மாநிலத்தை நிர்வகிப்பார். 2018 கர்நாடகா மற்றும் 2019 மகாராஷ்டிரா வழக்குகளில், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Read more Photos on
click me!

Recommended Stories