திமுககாரன் ஓரம்போ..! செந்தில் பாலாஜியின் ஆடுபுலி ஆட்டம்..! கொங்கு மண்டலத்தில் வெடிக்கும் எரிமலை..!

Published : Mar 24, 2026, 12:55 PM IST

அதிமுகவின் கோட்டையைத் தகர்க்க 'வெற்றி வேட்பாளர்கள்' என்ற பெயரில் மாற்றுக்கட்சியினரை முன்னிறுத்துவது, நீண்டகால விசுவாசிகளின் மன உறுதியைக் குலைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. 

PREV
14
செந்தில் பாலாஜியின் ஆடுபுலி ஆட்டம்

தமிழக அரசியலில் 'கோட்டை'யைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் கொங்கு மண்டலம் (மேற்கு மண்டலம்) திகழ்கிறது. கடந்த தேர்தல்களில் இந்த மண்டலத்தில் அதிமுக பெற்ற பலமே திமுகவிற்குப் பெரும் சவாலாக இருந்தது. இதனை முறியடிக்கவும், கொங்கு மண்ணில் திமுகவின் கொடியை வலுவாக ஊன்றவும் முதல்வர் ஸ்டாலின் வகுத்த வியூகம் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு. ஆனால், தற்போது வெளியாகியுள்ள உத்தேச வேட்பாளர் பட்டியல் கொங்கு மண்டல பாரம்பரிய திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

24
மாற்றுக்கட்சியினருக்கு மகுடமா?

செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தலைமைக்குச் சென்றுள்ளதாகக் கசிந்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தான் இந்த விவாதத்தின் மையப்புள்ளி. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் மாற்றுக்கட்சிகளிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் என்பது பாரம்பரிய நிர்வாகிகளின் குற்றச்சாட்டு.

கிணத்துக்கடவுக்கு தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து வந்த தளபதி முருகேசன். பல்லடம் தொகுதிக்கு மதிமுகவிலிருந்து வந்த முத்திரத்தினம். அந்தியூர் தொகுதிக்கு தேமுதிகவிலிருந்து வந்த சிவபாலன். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மதிமுக பின்னணி கொண்ட ரவி. பெருந்துறை தொகுதிக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுகவிலிருந்து இணைந்த சிந்து ரவிச்சந்திரன். இந்தப் பெயர்களைப் பார்க்கும் போது, பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த, சிறை சென்ற, தடியடி பட்ட "உடன்பிறப்புகள்" ஓரம் கட்டப்படுகிறார்களோ என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

34
பாரம்பரிய நிர்வாகிகளின் குமுறல்

"கட்சி கஷ்ட காலத்தில் இருந்தபோது கொடி பிடித்தவர்கள் நாங்கள். ஆனால், பதவி என்று வரும்போது நேற்று வந்தவர்களுக்கு சிவப்புக் கார்பெட் விரிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்பதே மேற்கு மண்டல திமுக நிர்வாகிகளின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது. செந்தில் பாலாஜியின் இந்த அதிரடி அரசியல், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் அவருக்கு இருக்கும் இடைவெளியைக் காட்டுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையைத் தகர்க்க 'வெற்றி வேட்பாளர்கள்' என்ற பெயரில் மாற்றுக்கட்சியினரை முன்னிறுத்துவது, நீண்டகால விசுவாசிகளின் மன உறுதியைக் குலைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

44
ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

இந்தத் தகவல்கள் மேற்கு மண்டலத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் சூழலில், அனைவரது பார்வையும் இப்போது அறிவாலயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. "தலைவர் ஸ்டாலின் எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்" என்ற ஒற்றை நம்பிக்கையில் பழைய நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் தோல்வி இங்கிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு. ஆனால், அது உள்கட்சி பூசலால் திமுகவின் தோல்வியாக முடிந்துவிடக் கூடாது என்பதில் மூத்த நிர்வாகிகள் கவனமாக உள்ளனர். வேட்பாளர் தேர்வு என்பது வெறும் 'வெற்றி வாய்ப்பு' சார்ந்தது மட்டுமல்ல, அது தொண்டர்களின் உணர்வு சார்ந்தது என்பதையும் தலைமை உணருமா என்பதே தற்போதைய கேள்வி.

Read more Photos on
click me!

Recommended Stories