விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!

Published : Jan 21, 2026, 06:55 PM IST

விஜய்யின் அடுத்த நம்பிக்கையான ‘கிறுத்தவ வாக்கு வங்கி’க்கு தன் கட்சி நிர்வாகிகள் மூலமாகவே செக் வைத்துள்ளார் ஸ்டாலின்.

PREV
15

ஏன் அரசியலுக்கு வந்தோம்..? என்று விட்டத்தைப் பார்த்து விஜய் நொந்து நூடுல்ஸாகும் அளவுக்கு கட்டி ஏறி நிற்கின்றன அவருக்கான பிரச்னைகள். சென்சார் கிடைக்காத ஜனநாயகன், கிண்டி கிழங்கெடுக்கும் சிபிஐ, இஷ்டத்துக்கு அரசியல் பண்ணும் கட்சி நிர்வாகிகள் என பல பஞ்சாயத்துகள் என புலம்புகிறார் விஜய். இதற்கெல்லாம் மேலாக விஜய்யின் அடிமடியிலெயே கை வைத்துள்ளது தி.மு.க. அவர் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கும் ‘கிறுத்தவ வாக்கு வங்கி’க்கு நறுக்கென ஆப்பு வைத்துள்ளார் ஸ்டாலின். அதுவும் களத்தில் எதிரியின் பொருளை எடுத்தே எதிரியை போட்டுத் தள்ளுவது போல் கிறுத்துவ சமுதாய புள்ளியை வைத்தே விஜய்யின் கிறுத்தவ வாக்கு வங்கிக்கு செக் வைத்துள்ளது தி.மு.க.

இது குறித்து அறிவாலய வட்டாரத்தினர், ‘‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம். சமூக நீதி பேசும் எங்கள் இயக்கத்துக்கு மிக நிச்சயமாக இந்தக் கருத்தில் உடன்பாடு உள்ளது. ஆனால், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட அல்ல… இன்று பெய்த மழையில் இன்னும் துளிரே விடாத காளானான விஜய் எங்களை பொய் புரட்டுகளுடன் விமர்சிப்பதுதான் சிரிப்பை உண்டாக்குகிறது.

25

தமிழர்களுக்கு சுயமரியாதை ஊட்டப் பிறந்த பெரியாரின் கட்சியில் ஊறி உரமேறி, கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் துவக்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க. தமிழக தமிழர்களுக்காக மட்டுமல்ல, ஈழம் உள்ளிட்ட உலக தமிழர்களுக்காக தன் ஆட்சியை பல முறை பணயம் வைத்த இயக்கம் இது. தலைவர் கலைஞர் தன் உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றியதால்தான் முதலமைச்சர் பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்த்தனர் மக்கள்.

அதேப்போல் இன்றைய முதல்வரான மு.க.ஸ்டாலின் ஒன்றும் எடுத்த எடுப்பிலேயே பதவியை பெற்றிடவில்லை. எமெர்ஜென்ஸியில் சிறைப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவித்து, அவர் வெளியே வந்தபோது உடலில் ஒட்டியிருந்தது உயிர் மட்டுமே. ஆனாலும்கூட உடனே எந்தப் பதவி சுகத்தையும் அவர் அனுபவித்துவிடவில்லை. மக்கள் பணி, கழகப்பணி என்று ஓடாக தேய்ந்து மெது மெதுவாகதான் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் என்று முன்னேறினார்.

உதயநிதியின் வளர்ச்சியும் படிப்படியானதுதான். கட்சிக்காகவும், எதிர்க்கட்சி காலத்தில் முரசொலியில் மக்களுக்காகவும் உழைத்துதான் எம்.எல்.ஏ. சீட் வாங்கி இன்று உச்ச நிலையை அடைந்துள்ளார். அண்ணாவாகட்டும், கருணாநி ஆகட்டும், ஸ்டாலினாகட்டும், உதயநிதியாகட்டும். என்றுமே எளிமையாய் நெருங்கும் தலைவர்களாகவும், மக்களுக்காக மண்மேட்டிலும், புழுதிக்காட்டிலும் இறங்கி உழைத்துதான் முன்னேறியுள்ளனர்.

35

உதயநிதியின் வளர்ச்சியும் படிப்படியானதுதான். கட்சிக்காகவும், எதிர்க்கட்சி காலத்தில் முரசொலியில் மக்களுக்காகவும் உழைத்துதான் எம்.எல்.ஏ. சீட் வாங்கி இன்று உச்ச நிலையை அடைந்துள்ளார். அண்ணாவாகட்டும், கருணாநி ஆகட்டும், ஸ்டாலினாகட்டும், உதயநிதியாகட்டும். என்றுமே எளிமையாய் நெருங்கும் தலைவர்களாகவும், மக்களுக்காக மண்மேட்டிலும், புழுதிக்காட்டிலும் இறங்கி உழைத்துதான் முன்னேறியுள்ளனர்.

ஆனால், இந்த நொடி வரை சினிமா நாயகனாக இருக்கும் விஜய், தன் கட்சியின் பொதுச்செயலாளரை கூட அவ்வளவு எளிதில் பார்க்க வெளியே வருவது கிடையாது. பனையூரே பரம உலகம் என்று வாழ்ந்து வருபவர். ரசிகர்களை தொண்டர்களாக, நிர்வாகிகளாக நினைத்து ‘ஆஹா நானும் தலைவனே’ என்று கற்பனை உலகத்தில் சஞ்சரித்து வருகிறார்.

தமிழக மக்களின் எந்த பிரச்னைக்காக தெருவில் இறங்கி போராடிவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தார் என சொல்லுங்கள். நெரிசல் மிகுந்த பேருந்தில் பயணித்திருக்கிறாரா? கால் நடையாக சென்று பால் வாங்கியிருக்கிறாரா? வரிசையில் நின்று ரேஷன் வாங்கியுள்ளாரா? அல்லது அந்த உழைப்புதான் அவருக்கு தெரியுமா? இரண்டரை மணி நேர சினிமாவின் க்ளைமேக்‌ஷில் தனது லட்சியம் ஜெயிப்பது மாதிரி யதார்த்த அரசியலிலும் கட்சி ஆரமித்த இரண்டே வருடங்களில் முதல்வராகிடுவோம்! என்று கனவு காண்கிறார்.

அவர் முதல்வராகட்டும் தப்பில்லை. அவருக்கு அந்த உரிமை இல்லாமலில்லை. யார் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் எப்படிப்பட்டவர் முதல்வராக வேண்டும் என்று ஒன்று உள்ளது. விஜய் பெரிதாக நம்புவது இளைஞர்கள் மற்றும் கிறுத்தவ வாக்கு வங்கியைதான். ஆனால் சமீபத்தில் தமிழகத்தின் சுமார் 30 லட்சம் கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கிய முதல்வர். நான் முதல்வன் திட்டம் வாயிலாக அவர்களுக்கு மாதாமாதம் கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறார். இதெல்லாம் கல்லூரி மாணவ மாணவியர், முதல் தலைமுறை வாக்காளர்கள், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் இளம் தலைமுறையினர் மத்தியில் திமுக மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் மிகப்பெரிய ஈர்ப்பினை உருவாக்கியுள்ளது.

45

அதேவேளையில் உதயநிதியின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையானது தனது சீரிய பணியின் மூலம் இதுவரையில் இல்லாத அளவிற்கு தமிழக விளையாட்டுத் துறையினை மேம்படுத்தி, பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவிக்க வைத்து வருகிறது. இவையெல்லாம் தமிழக இளம் தலைமுறையினர் மனதில் உதயநிதியின் மேல் பெரிய அபிமானத்தை தோற்றுவித்துள்ளது. ஆக இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய வாக்கு வங்கியானது தி.மு.க.வை ஆதரிக்கப்போவது உறுதி.

அதேவேளையில் விஜய்யின் அடுத்த நம்பிக்கையான ‘கிறுத்தவ வாக்கு வங்கி’க்கு தன் கட்சி நிர்வாகிகள் மூலமாகவே செக் வைத்துள்ளார் ஸ்டாலின். குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர செயலாளரும், அம்மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜார்ஜ் சமீபத்தில் ஊட்டியில் போதகர் மோகன் சி லாசரஸ் தலைமையில் ‘அற்புத பெருவிழா’ ஒன்றை நடத்தினார். இரு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் சுமார் ஒரு லட்சம் கிறுத்தவர்கள் குவிந்தனர். மிக பெரிய ஹிட் அடித்த இந்நிகழ்வு முதல்வரின் கவனம் வரை சென்றது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, கரூர் அடங்கிய மாவட்டங்களின் தி.மு.க. மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, ஜார்ஜிடம் சில ஸ்கெட்ச்களை போட்டுக் கொடுக்க, அதன் படி செயல்பட்ட ஜார்ஜ் அடுத்தடுத்து குன்னூர், கோவை, மேட்டுப்பாளையம் என்று வரிசையாக இப்படியான அற்புத விழாக்களை நடத்தி வருகிறார். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களையும் கிறுத்தவ மக்களுக்கு ‘கிறிஸ்துமஸ் அன்பளிப்பு’ எனும் டைட்டிலில் ஜார்ஜ் வழங்கியுள்ளார்.

55

பேராயர்கள், பாதிரியார்கள் பலரையும் அழைத்துக் கவுரவித்து உதவிகளை வழங்கி வருகிறார் ஜார்ஜ். அவரின் இந்த மூவ்களுக்கு கிறுத்தவ சமுதாயத்தினர் மத்தியில் பெரிய ஈர்ப்பு உருவாகியுள்ளது. பல மாவட்ட கிறுத்தவ அமைப்பினர் தங்களின் நிகழ்வுகளுக்கு ஜார்ஜை தலைமை தாங்க அழைக்கின்றனர். காரமடை அருகே கரியாம்பாளையம், விழுப்புரம், சென்னை என்று பல இடங்களில் கிறுத்தவ நிகழ்வுகளுக்கு தலைமை ஏற்றுள்ள ஜார்ஜ், தமிழகமெங்கும் பல லட்சம் செலவில் அடுத்த ரவுண்ட் அற்புத பெருவிழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் தான் கலந்து கொள்ளும் கிறுத்தவ விழாக்களில் மைனாரிட்டி மக்களின் நண்பனாக ஸ்டாலின் அரசு செய்து வரும் நன்மைகளை பட்டியலிட்டு பிரமாதப்படுத்துகிறார். இதற்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஆக விஜய்க்கு செக் வைக்கும் வகையில் தி.மு.க. களமிறக்கிவிட்டிருக்கும் இந்த ‘அற்புத பெருவிழா’வால் கதி கலங்கி கிடக்கிறது த.வெ.க’’ என்ற்கின்றனர்.

இது குறி்த்டது ஜார்ஜ் கூறுகையில், “திமுக என்றும் ‘மைனாரிட்டியின் நண்பன்.’ அதிலும் கிறுத்தவ மக்களின் செல்லப்பிள்ளைதான் தலைவர் ஸ்டாலின். அவர் மீது தமிழக கிறுத்தவ மக்கள் மாறாத அன்பு வைத்துள்ளனர். இதை நான் தமிழகம் முழுக்க அற்புத விழாக்களில் கண்கூடாக பார்க்கிறேன்” என்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories