இந்நிலையில், கடந்த 5ம் தேதி, தவெக தலைவர் விஜயை, பனையூர் இல்லத்தில் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவின் சக்ரவர்த்தி சந்தித்து தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, விஜயிடம், 125 தொகுதிகளின் பட்டியலை வழங்கி அதிலிருந்து 75 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவரை விஜயிடம் அனுப்பியது ராகுல்காந்தி தான் என தமிழக காங்கிரசில் உள்ள விஜய் ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்திக்கு தெரியாது என திமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
விஜயை சந்திக்கும் முன், பிரவின் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ‘மற்ற கட்சிகள் கட்சி நிகழ்ச்சிக்கும், பேரணிக்கும் ஆட்களை திரட்ட வேண்டி இருக்கிறது. தவெக நிலைமை, நேர் மாறாக இருக்கிறது. அதிகக் கூட்டம் கூடுவதால், அதை குறைப்பதே அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது’ எனடத தெரிவித்து இருந்தார் குறிப்பிட்டிருந்தார்.