சோனியா காந்தி கணவருடன் இருந்த அழகிய தருணம்..! அரிய புகைப்பட தொகுப்பு..!

First Published Jul 2, 2020, 3:08 PM IST

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, பிறந்தவர் சோனியா காந்தி.  இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் அரசியல்வாதி இவர். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் அங்கமாக மாறினார். இவரை பற்றிய அரிய புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு இதோ...
 

சோனியா காந்தி இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். தன் கணவரின் படுகொலை நிகழ்ந்து ஏழு வருடங்களுக்கு பின், 1998ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்து வந்தார். அதன் பிறகு அவர் மகன் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி நீடித்து வருகிறார்.
undefined
இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான இவர், 2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3வது இடத்திலும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6வது இடத்தையம் பிடித்தார்.
undefined
மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007, ஆண்டு மற்றும் 2008ம் ஆண்டுகளில் உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் இவரை தேர்வு செய்தது குறிப்பிட்டுள்ளது.
undefined
1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அப்போது அவர் கிரேக்க உணவகத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார். அந்த உணவகத்தில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜீவ் காந்தியை 1965ல் சந்தித்தார். பிறகு இருவரும் 1968ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி தனது மாமியாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார்.
undefined
ராஜீவ்-சோனியா இணைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜீவ் ஒரு விமானியாக பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் சோனியா தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.
undefined
1980 சூன் 23ல் தனது இளைய சகோதரர்சஞ்சய் காந்திவிமான விபத்தில் இறந்தமையால் ராஜீவ் காந்தி 1982ல் அரசியலில் கால்பதிக்க நேர்ந்தது. எனினும் சோனியா காந்தி பொதுவாழ்வில் இருந்து விலகியே இருந்தார்.
undefined
பொதுவாழ்வில் சோனியா காந்தியின் ஈடுபாடு அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுமே தொடங்கியது. பிரதமரின் மனைவியாக அவரது அதிகாரப் பூர்வ உபசரணியாக அவர் செயல்பட்டார் மற்றும் ஏராளமான தேசிய நிகழ்வுகளில் அவர் உடன் சென்றார்.
undefined
1984ல், அமேதியில் நடந்த தேர்தலில் ராஜீவை எதிர்த்து அவரது தம்பியின் மனைவியான மேனகா காந்தி போட்டியிட்டார். அப்போது சோனியா தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் களமிறங்கினார்.
undefined
அவரது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு அவர் பிரதம மந்திரியாக மறுத்தமையால், காங்கிரஸ் கட்சியானது பி.வி நரசிம்மராவை தலைவராகவும் தொடர்ந்து பிரதம மந்திரியாகவும் தேர்வு செய்தது. எனினும், அடுத்த சில வருடங்களுக்கு, காங்கிரஸின் எதிர்காலம் ஊசலாட்டம் காணவே 1996 தேர்தல்களில் அது தோல்வி கண்டது.
undefined
கட்சியின் தொய்வுற்ற எதிர்கால நிலைகளை புதுப்பிக்க வேண்டி, 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.
undefined
2019 மக்களவை தேர்தல் 17 ஆவது மக்கவளை தேர்தலில் ரே பரேலியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 534918 வாக்குகளும் அடுத்து வந்த பாசகவின் தினேசு பிரதாப் சிங் 367740 வாக்குகளும் பெற்றனர். இன்னும் இவர் சாதனைகள் பல...
undefined
click me!