ஜெயலலிதாவையே அசர வைத்த அமைச்சர் விஜய பாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினி!

First Published Jun 19, 2020, 12:41 PM IST

பேச்சில் புலியாகவும், தைரியத்தில் சிங்கமாகவும் இருக்கும் அமைச்சர் விஜய பாஸ்கர் மகள் ரிதன்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் இதோ
 

தமிழக சுகாதார துறை அமைச்சரான விஜய பாஸ்கர், சிறிய வயதிலேயே எம்.எல்.ஏ ஆனவர். 27 வயதிலேயே புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தலைமையின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.
undefined
எம்.பி.பி.எஸ் முடித்த சில வருடங்களிலேயே எம்.எல்.ஏ. ஆன விஜய பாஸ்கர், அதன் பின்பு தான் ரம்யா என்கிற பெண்ணை திருமணமே செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் தாலி எடுத்து கொடுத்து நடத்தியும் வைத்தார்.
undefined
இந்த தம்பதிகளுக்கு ரிதன்யா பிரியதர்ஷினி என்கிற மூத்த மகளும், அனன்யா என்கிற இளைய மகளும் உள்ளனர்.
undefined
இவர்களில் மூத்தமகள் ரிதன்யா புதுகோட்டை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், விஜய பாஸ்கர் புதுகோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியில் போட்டியிட்டார்.
undefined
அப்போது தன்னுடைய தந்தைக்காக சூறாவளி சுற்று பயணம் மேற்கொண்டார் 8 வயதே ஆன ரிதன்யா. தன்னுடைய மழலை மாறாத குரலில், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தன்னுடைய தந்தை விஜய பாஸ்கர் விரலி மலை தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக இருந்து செய்த நல திட்டங்களை மனப்பாடம் செய்தது போல், பேசி மக்கள் மனதில் பதிந்தார். அதிமுக கட்சியில் நல திட்டங்களையும் எடுத்து கூறி, தன்னுடைய தந்தைக்கு வாக்களிக்குமாறு கேட்டார். இவருடைய பேச்சாற்றல் விரலி மலை தொகுதி மக்களால் வியர்ந்து பார்க்கப்பட்டது.
undefined
பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள் பள்ளி மாணவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அருங்காட்சியகத்தையும் பார்க்க, பள்ளி மாணவர்கள் வந்தனர்.
undefined
அப்போது தலைமை செயலகம் வாசலில் இருந்து, உள்ளே சென்ற ஜெயலலிதா மாணவர்களை கண்டதும், திடீர் என மாணவர்களை தன்னுடைய அறைக்கு அழைத்து வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
undefined
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ஜெயலலிதா உங்களை கண்டது, எதிர்பாராத ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இளம் வயதில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் நேரம் செலவிடுவதை தவிர்த்து, உளதாம் பலம் பெரும் வகையில் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
undefined
ரிதன்யாவிற்கு முத்தம் மிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
undefined
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயல் காரணமாக பெரிதளவு சேதத்தை சந்தித்த போது, தன்னுடைய தந்தையுடன் சென்று சிறு வயதிலேயே பலருக்கு ஆறுதல் சொன்னாராம் ரிதன்யா.
undefined
கடந்த வருடம், தீபாவளி பண்டிகையின் போது சுஜித் என்கிற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அந்த சிறுவனை மீட்கும் பணியில் இருந்த தன்னுடைய அப்பாவிடம் பேசிய ரிதன்யா, தன்னுடைய அப்பாவிடம் நமக்கு தீபாவளி பண்டிகை கூட வேண்டாம். நீங்கள் நல்ல படியாக சுஜித்தை மீது வாரங்கள் நாங்கள் உங்களுக்காக ஸ்வீட், பட்டாசு என எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி காத்திருப்போம் என்று கூறி உருக வைத்தாராம்.
undefined
சமீபத்தி கூட கொரோனா பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவருக்கு, செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவருக்கு சல்யூட் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாக பரவியது.
undefined
மேலும், கொரோனா பாதிப்புகளை விளக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாகவும் இவர் பாடல் ஒன்றை பாடி, பாரத நாட்டியம் ஆடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!