‘‘மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகிறார்கள். விஜய் ஒரு சக்திதான். அதை யாரும் மறுக்கவே முடியாது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் உருவாகி விட்டார்’’ என காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்குமா? தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? என்பது தமிழக அரசியல்களத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமானால், அதிக சீட்டுகள், அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி, ‘‘60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததில்லை. காங்கிரஸ் தொண்டர்களுடைய கோரிக்கை அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. இது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. எதுக்கு இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் காங்கிரஸ் கட்சி 60 வருடங்களாக பலவீனமாகவே போய்க்கொண்டு இருக்கிறது.