Vijay Sangeetha: அதிரடி ட்விஸ்ட்.! சமரசத்தில் முடிந்த விஜய் – சங்கீதா விவகாரம்?! குழந்தைகளுக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்ட "ஈகோ"

Published : Mar 06, 2026, 01:40 PM IST

விஜய்யின் விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், அவரது குழந்தைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
16
தளபதியின் தலைக்கு வீசப்பட்ட கத்தி.!

தமிழக அரசியலின் 'தளபதி'யாக உருவெடுத்துள்ள விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் கோட்டையை நோக்கிப் பயணிக்கத் தயாராகி வரும் வேளையில், அவரது இல்லறக் கோட்டையில் விரிசல் விழுந்ததாக வந்த செய்திகள் தமிழகத்தையே அதிர வைத்தன. 25 ஆண்டுகால பந்தம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு எனப் பரவிய தகவல்கள், அவரது அரசியல் எதிரிகளுக்கு ஆயுதமாகவும், ரசிகர்களுக்குப் பேரிடியாகவும் அமைந்தன.

26
அதிரடி 'கிளைமாக்ஸ்' திருப்பம்

ஆனால், இப்போது ஒரு அதிரடி 'கிளைமாக்ஸ்' திருப்பம் அரங்கேறியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. "ஈகோ" என்ற ஒற்றைச் சொல் பல குடும்பங்களைச் சிதைக்கும் ஆயுதம். ஆனால், விஜய்யின் விஷயத்தில் அந்த ஈகோவைத் தூக்கி எறிய வைத்திருப்பது 'குழந்தைகள்' என்ற பாசம். ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவின் எதிர்காலம், ஒரு தந்தையாக விஜய்யின் பொறுப்பைத் தட்டி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

36
அரசியல் சதுரங்கம் ஆட்டம்.!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி விஜய் காய்களை நகர்த்தும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனங்களுக்குள்ளாவது அவரது அரசியல் இமேஜைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து, திரைமறைவில் சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. சுமார் ₹250 கோடி செட்டில்மென்ட் எனப் பேசப்பட்டாலும், பணத்தை விட "குடும்பம்" என்ற பிணைப்பே முக்கியம் என இரு தரப்பும் இறங்கி வந்திருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

46
குப்பையில் வீசப்படும் ஈகோ யுத்தம்.!

தற்போது அஜித்தின் குடும்பத்துடன் சங்கீதா இருக்கும் பழைய வீடியோக்கள் வைரலாவதும், விஜய் அமைதி காப்பதும் ஒரு மௌனமான சமாதானத்தின் அறிகுறியோ எனத் தோன்றுகிறது. மொத்தத்தில், திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் 'ஈகோ'வை குப்பையில் வீசிவிட்டு, தன் பிள்ளைகளுக்காகவும், அரசியல் பயணத்திற்காகவும் விஜய் ஒரு 'மாஸ்' ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

56
ஜாதகப்படி எல்லாம் மாறப்போகுது.!

இதற்கிடையில், மகாராட்டிராவில் இருக்கும் லண்டன் வாழ் தொழிலதிபரான சங்கீதாவின் தந்தை, இருவருக்கும் இடையே மீண்டும் பாலமாகச் செயல்படுவதாகவும், ஏப்ரல் 20-ம் தேதி நடக்கவிருக்கும் நீதிமன்ற விசாரணையைத் தள்ளிப்போட அல்லது ரத்து செய்ய ரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. விஜயின் ஜாதகப்படி எல்லாம் மாறப்போகுது என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

66
தற்போதைய ஹாட் அப்டேட்!

'ஜனநாயகம்' படத்தின் ரிலீஸ் மற்றும் தேர்தல் களம் என இரண்டையும் கணக்கில் கொண்டு, 'தளபதி' இப்போது ஒரு மெகா சமரசத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதே தற்போதைய ஹாட் அப்டேட்! 

Read more Photos on
click me!

Recommended Stories