செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா! அடுத்து இந்த அமைச்சருக்கு நடக்கபோவதை மட்டும் பாருங்கள்!அலறவிடும் அண்ணாமலை

Published : Aug 05, 2023, 11:02 AM ISTUpdated : Aug 05, 2023, 11:21 AM IST

மத்திய அரசு பணத்தை எடுத்து ரூ.1000 மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்கள் என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

PREV
14
செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா! அடுத்து இந்த அமைச்சருக்கு நடக்கபோவதை மட்டும் பாருங்கள்!அலறவிடும் அண்ணாமலை

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதன்படி ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நேற்று மதுரை மாவட்டம் மேலூரில் யாத்திரையின் போது உரையாற்றிய அண்ணாமலை;- திமுக ஆட்சி கொள்ளையடிக்க கூடிய ஆட்சியாக உள்ளது.

24

ஏழைக் குடும்பங்களைத்தான் டாஸ்மாக் பெரிதும் பாதிக்கிறது. மக்கள் குடிக்க வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறந்துவிடலாம். கடன் வாங்குவதிலும் டாஸ்மாக்கிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. மத்திய அரசு பணத்தை எடுத்து ரூ.1000 மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க;- இனிமே தான் ஆட்டமே இருக்கு! மீண்டும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் ராகுல் காந்தி? எப்போது தெரியுமா?

34

மதுரை தொகுதியின் எம்.பி. வெங்கடேசன், விளம்பரங்களிலும், புத்தக வெளியீட்டு விழாவிலும் மட்டும் தான் இருக்கிறார். செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துதுவமனைக்கு மாற்றுகிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் யாரும் சரியில்லையா? அமலாக்கத்துறைக்கு பயந்து செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார். 

44

செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான். மூர்த்தி அண்ணணுக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். நான் எதாவது சொல்லி நடந்து விட்டால் பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்று என்பார்கள். சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவினரை விமர்சிப்பதா.? எங்களை தொட்டவன் கெட்டான்..! அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்

Read more Photos on
click me!

Recommended Stories