முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

First Published | Aug 4, 2023, 10:57 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

cv shanmugam

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்து ஜூன் 23ம் தேதி வீடு திரும்பினார். 

இந்நிலையில் நேற்று இரவு திடீரென சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

Tap to resize

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

click me!