கைவிரித்த உச்சநீதிமன்றம்? பறிபோகிறது ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி?

First Published | Aug 3, 2023, 6:52 AM IST

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் அவரது எம்.பி. பதவி பறிபோகிறது. 

தேனி தொகுதியில் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகமாக பெற்று ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

chennai high court

ஆனால் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்து, தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், பணப் பட்டுவாடா செய்து அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Latest Videos


ravindiranath

இந்த வழக்கை நிராகரிக்குமாறு ரவீந்திரநாத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின் முடிவில், தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

opr thanga

இந்நிலையில் தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தம்மையும் சேர்க்க கோரி திமுகவின் தங்க தமிழ்ச்செல்வனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக அளித்த அவகாசம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், அதற்குள் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓ.பி. ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி பறிபோவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

click me!