இது தொடர்பான அறிவிப்புகளை, பாஜக தரப்பு தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளாக அறிவித்ததாலேயே, அந்த மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். பிரதமராக மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதற்கு மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே பிரதான காரணம். மத்தியில் ஸ்திரத்தன்மையோடு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், பிரதமர் மோடியால் நினைத்த மாத்திரத்தில் நிதி உள்ளிட்ட பல விஷயங்களில், எந்த மாநிலத்துக்கும் உதவிகளை செய்ய முடியும்.
எனவே, வரும் தமிழக சட்டசபை தேர்த லில், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் நிதியுதவி, தாலிக்கு தங்கம், தொகுப்பூதிய பணி நிரந்தரம் உட்பட மக்கள் பயன்பெறும் வகையில் வாக்குறுதிகளை வெளியிடுங்கள். இதற்காக நிதி ஆதாரம் குறித்து கவலையே பட வேண்டாம். இது தொடர்பாக யார் விமர்சனம் செய்தாலும், அதிமுக அளிக்கும் வாக்குறுதிகளுக்கு பிரதமர் மோடி 'கேரண்டி' அளித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லுங்கள்' என பதிலளிக்கு நம்பிக்கையோடு அதிமுக தலை மைக்கு பாஜக தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என அவர்கள் தெரிவித்தனர்.