அத்தோடு இரண்டு முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் ஏற்கனவே செங்கோட்டையன் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சியும் தொடர்ந்து தவக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், அளந்தகரை கிராமத்தில் பிறந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். சட்டப்படிப்பை முடித்த இவர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக கூட்டணியுடன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியையும் சந்தித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவினார். 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தொடர் தோல்விகளையும் சந்தித்தார். இருந்தபோதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியகுமரி தொகுதி அல்லது நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிட விரும்பி வருகிறார். தற்போழுது தமிழக பாஜக சார்பில் ஒரு வேட்பாளர் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.