இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் தனியார் மகாலில் கடந்த 18-ம் தேதி பாமக வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர் கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.
2026 சட்ட மன்ற தேர்தல் பணிகளை கவனிக்க மூத்த தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்து இருந்ததார். ஆனால், கனமழையால் திண்டிவனத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் தற்போது மவுனம் காத்து வருகிறார். வழக்கமாக டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை தோறும் நிருபர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரமும், நேற்றும் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை.