ஒரு வாரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள்தான் குற்றவாளி என்று சொல்லி வந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் பொறுமையாக இருந்தோம். சட்டரீதியாக இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவுக்கு தவறு என்பதை உச்சநீதிமன்றம் பதிவு செய்து இருக்கிறது. நாங்கள் மீடியாவிடமும் பேச முடியவில்லை. காவல்துறையையும் அணுக முடியவில்லை. அதே நேரத்தில் அந்த ஒரு வாரம் நீதிமன்றம் வெக்கேஷனில் இருந்தது.
உயர் நீதிமன்றம் எங்களுக்கு எதிரான ஒரு உத்தரவை உருவாக்கி சட்டரீதியாகவும் சரி, காவல்துறை மூலமாகவும் சரி, தமிழக அரசு செய்தி நிறுவனஙள் மூலமாகவும் சரி, தமிழக வெற்றி கழகம் தான் இதற்கு முழு பொறுப்பு என்று மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள். சமூக வலைதளத்தில் இருக்கக்கூடிய எங்களது தம்பிகளை கைது செய்தார்கள். இன்றைக்கு எங்களுடைய முழுமையான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் முக்கியமான கோரிக்கையாக நாங்கள் கேட்டது ஒரு கமிட்டி அமைக்க கூறினோம்.உச்சநீதிமன்றம் 3 நபர்கள் கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கேட்டோம்.