ஓபிஎஸ் அவர் தப்ப உணர்ந்துட்டாரு! இபிஎஸ் கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை! இதுதான் நடக்கும்! தினகரன்.!

Published : Mar 21, 2023, 07:38 AM IST

தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு தற்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்று புரியவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

PREV
15
ஓபிஎஸ் அவர் தப்ப உணர்ந்துட்டாரு! இபிஎஸ் கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை! இதுதான் நடக்கும்! தினகரன்.!

தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடந்த 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என அவர் உணர்ந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது தவறை உணர்ந்து தான் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். எங்களுடைய கருத்தும் அதுதான். 

25

அதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே ஈரோடு அதிமுகவின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. அதிலும் 1989ல் இரட்டைஇலை சின்னம் இல்லாமல் அம்மா அவர்கள் சேவல் சின்னத்தில் நின்று ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளை வென்றார். ஆனால் இப்போது இரட்டை இலை இருந்தும் திமுக மீது அதிருப்தி இருந்தும் வேறு யாரும் போட்டியிடாத சூழ்நிலையிலும் 67000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

35

இரட்டை இலை சின்னம் இருந்தும் ஆளும் கட்சிக்கு நிகராக பொருள் செலவு செய்தும் ஏற்பட்ட படுதோல்வி அதிமுக பலவீனம் அடைந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக வருகின்ற 24ம் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது. 

45

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு தற்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்று புரியவில்லை. 

55

இதேபோல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது. சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories