ஆஹா இதுக்காக தான் ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி சந்திப்பு நடைபெறவில்லை.. உண்மையை போட்டுடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.!

First Published Mar 19, 2023, 7:15 AM IST

ஓ.பன்னீசெல்வம் - சசிகலா- டிடிவி.தினகரன் அரசியல் ரீதியான சந்திப்பு ஏன் இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தை அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டுடைத்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி இன்று பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை 27ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடாத பட்சத்தில் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன்  தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு அறிவிப்பு மிகவும் சிறுப்பிள்ளைத்தனமானது. அதிமுக தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை. அதிமுகவினர் உண்மையான தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். ஜெயலலிதா எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம்.  மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார்.

மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் தான் ஓபிஎஸ் சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை. 

அதேபோல டிடிவி.தினகரன் அமமுக என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரும் இணைந்து பணியாற்றலாம். அதாவது சிபிஎம் சிபிஐ போன்று செயல்படலாம். தேர்தல் நேரத்தில் எல்லா விதமான சந்திப்புகளும் நிச்சயம் நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

click me!