பசும்பொன்னில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் வைத்த கண்ணிவெடி..! சிதைகிறதா EPS-ன் மனக்கோட்டை..?

Published : Oct 31, 2025, 11:20 AM IST

முக்குல த்தோர் சமூகத்தின் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அதிருப்தி இருக்கும் நிலையில், அந்த எதிர்ப்பை கூர்மையாக்கும் வகையில் தேவர் ஜெயந்தியை வைத்து ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகிய மூன்று பேர் வியூகம் அமைத்திருக்கலாம்.

PREV
14

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு தென் தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்கு கணிசமாக குறைந்துள்ளது. இது 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. சசிகலா, டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதே முக்கியக்காரணம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி இந்த வாக்கை மீட்க முயற்சிகள் செய்கிறார். ஆனாலும் இந்த முயற்சிகள் கடினம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து நீக்கியது அச்சமூக வாக்கைப் பிரித்தது. 2021 தேர்தலில் தென் 60 தொகுதிகளில் அதிமுக 16 இடங்களில் மட்டுமே வென்றது. எடப்பாடி பழனிசாமி, தேவருக்கு பாரத் ரத்னா விருது கோரி அமித் ஷாவை சந்தித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சாரத்தில் தென் 7 மாவட்டங்களில் 36 தொகுதிகளைச் சுற்றி வந்தார். மதுரையில் மாநாடு நடத்தி சமூக ஆதரவைப் பெற முயன்றார். துணைப் பொதுச் செயலாளர் பதவியை முக்குலத்தோருக்கு அளிக்கலாம் என்று 2023-ல் திட்டமிட்டார். ஆனால் செயல்படுத்தவில்லை.கட்சியில் 10க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் முக்குலத்தோர் உள்ளனர். ஆனால், முக்கிய பதவிகளில் இல்லை. தற்போதைய நிலையில் முக்குலத்தோர் வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உள்ளது.

24

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக வந்து மரியாதை செலுத்தியது பசும்பொன்னை அரசியல் களமாக மாற்றி அதிமுகவிலும் புயலை கிளப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான மனநிலை இருக்கும் மூவரணி, தேவர் ஜெயந்தியை வைத்து ஒன்றாக சங்கமித்திருக்கும் நிலையில், யாருக்கு சாதகம், பாதகமாக இருக்கும் என்கிற விவாதங்களை கிளப்பி உள்ளது.

வழக்கமாக அஞ்சலி செலுத்த வரும் சிலரின் அட்ராசிட்டியால் திணறி போகும் பசும்பொன் கிராமம், இந்த முறை அரசியல் கண்ணிவெடிகளால் திணறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். காலையில் இருந்தே பரபரப்பின் உச்சமாக இருந்த பசும்பொன் நோக்கி மதுரையிலிருந்து ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும் ஒரே காரில் பயணம் செய்தனர். முன் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருக்க, பின் இறுக்கையில் செங்கோட்டையில் அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில் காரில் இருந்து பிரச்சார வாகனத்திற்கு மாறிய இருவரும் தங்களது ஆதரவாளர்களுக்கு கை அசைத்து உற்சாகமாக்கினர். நெடுங்குளம் என்ற இடத்தில் ஓபிஎஸ் செங்கோட்டையனுடன் சேர்ந்து டிடிவி தினகரனும் இணைந்து கொண்டார். மூன்று பேரும் ஒன்றாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததோடு திமுக ஆட்சியை அகற்ற ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறினர். மூன்று பேரும் எங்களுக்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமிதான் என சூளுரைத்தனர்.

34

சசிகலா வர தாமதம் ஆகிவிட்டது என்பதால் தான் மூன்று பேரும் முன்கூட்டியே மரியாதை செலுத்தி விட்டோம் என பிரஸ்மீட்டில் விளக்கம் கொடுத்தனர். டிடிவி.தினகரன், சசிகலாவுக்கு காத்திருக்காமல் புறப்பட்டு சென்று விட்டார். கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகள் ஏற்கனவே பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து வெளிப்படையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார் செங்கோட்டையன். அதாவது டிடிவி, ஓபிஎஸ் நீக்கப்பட்டதன் காரணமாக அதிமுகவுக்கு கிடைத்து வந்த முக்குலத்தோர் சமூக வாக்குகள் கிடைக்காமல் போனதாக சொல்லப்பட்டது. இதுதான் கடந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. இபிஎஸ் மீது அதிர்ச்சியில் இருக்கும் மூன்று பேரும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் ஒன்றாக சங்கமித்தது புயலை கிளப்பி உள்ளது.

44

ஏற்கனவே முக்குல த்தோர் சமூகத்தின் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அதிருப்தி இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அந்த எதிர்ப்பை கூர்மையாக்கும் வகையில் தேவர் ஜெயந்தியை வைத்து ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகிய மூன்று பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வியூகம் அமைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இணைந்து செயல்பட போவதாக கூறிய மூன்று பேரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? எப்படி இணைந்து செயல்பட போகிறார்கள் என்பது குறித்து விளக்கம் கொடுக்காமல் போகப் போகத் தெரியும் என முடித்டுக் கொண்டனர். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது செங்கோட்டையின் எண்ணமாக இருக்கிறது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என டிடிவி தினகரன் விடாப்பிடியாக இருக்க, அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்பட எந்த தியாகத்திற்கும் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்து இருந்தார். இப்படி மூன்று பேரின் நோக்கமும் முக்கோண திசையில் இருக்கும்போது எப்படி இணைந்து செயல்பட போகிறார்கள்? மூன்று பேரின் போர் கொடி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாக அமையுமா? என்ன திட்டத்தை கையில் வைத்து இருக்கிறார்கள்? மூவரணியின் நோக்கம் என்ன முடிவை நோக்கி நகரும்? மூன்று பேரின் நிலைப்பாடு அதிமுக தொண்டர்களிடம் எந்த அளவுக்கு எடுபடும்? என்பதெல்லாம் போக போகத்தான் தெரியவரும்.

click me!

Recommended Stories