ஓபிஎஸுக்கான தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கப்படுகிற தொகுதிகளில் ஒதுக்குகிறோம் என பாஜக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் போகலாம். ஆனால் அவர்களுக்கு கொடுக்கிற தொகுதிகளில் பிரித்துக் கொடுத்தால் போக வேண்டாம் எனக் கூறி உள்ளனர். ஆனால், அதிமுகவில் ஓபிஎஸை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதால் அதிமுக் ஒருங்கிணைப்பையே பாஜக ஒட்டுமொத்தமாக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணைந்தால் அதிமுக ஒருங்கிணைப்பு, இல்லையேல் என்.டி.ஏ கொடுக்கும் தொகுதிகளில் வாய்ப்பில்லை என முடிவெடுத்து இருக்கிறார் ஓபிஎஸ். என்.டி.ஏ கூட்டணியில் அதிமுகவே முதன்மைக் கட்சியாக உள்ளது. இபிஎஸ் தான் கூட்டணியின் முகமும், முதல்வர் வேட்பாளரும். கூட்டணி முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி. தினகரன் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கலாம் என்ற அச்சம் தான் அவரது தயக்கத்திற்கான காரணங்கள். இதனால் ஓபிஎஸ் தரப்பு பாஜகவுடன் இணைந்தாலும் முழு நம்பிக்கை இல்லை.