இதுதான் புதிய ஓய்வூதிய திட்டத்தின் லட்சணமா..? உடனே வெளுத்த சாயம்.. தலைமறைவான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்..!

Published : Jan 10, 2026, 04:41 PM IST

அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ -ஜியோ முன்னணி நிர்வாகிகள் என அனைவரும் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் நடத்த நடத்த திட்டமிட்டு இருந்த பாராட்டு விழாவை கைவிட்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.

PREV
14
வெளியானது புதிய ஓய்வூதிய திட்ட அரசாணை

தமிழ்நாடு அரசோட புதிய பென்ஷன் (TAPS) திட்டத்துக்காக முதல்வருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடிய ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் அனைவரும் இப்போது தலைமுறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் புதிய பென்ஷன் திட்டத்தை அறிவித்தார். சற்று முன் ஜனவரி-1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11,000 கோடி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தை அறிவித்த 5 நிமிடங்களில் ஆகச்சிறந்த திட்டம், இப்படி ஒரு திட்டம் எங்கேயுமே இல்லை என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள், இன்னும் பல சங்கங்களை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு இனிப்புகளை ஊட்டி கொண்டாடினார்கள்.

24
இது ஓய்வூதிய திட்டமே அல்ல

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் புதிய பென்ஷன் திட்டம் அரசியல் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம் என்றும் இதில் நன்மைகளை விட, தீமைகள் அதிகம் என்றும் சமூக வலைதளங்கள் மூலமாக புள்ளி விவரங்களும், கணக்கீடுகளும் அரசு ஊழியர்கள் மத்தியில் பகிரப்பட, அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிரான மன நிலைக்குப் போனார்கள்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ‘‘புதிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதிய திட்டமே அல்ல. அது ஒரு சிறு சேமிப்பு திட்டம். சிறுசேமிப்பு திட்டம்கூட ஒரு அஞ்சல் துறையிலையோ, ஒரு வங்கியிலேயே சிறுசேமிப்பு போட்டால் அவர்கள் வட்டியை கொடுப்பார்கள். அது போன்ற வட்டியைக்கூட கொடுக்காமல் இவர்கள் எப்படி அரசு ஊழியர்களிடமிருந்து சுரண்ட முடியும்? இது ஒரு விஞ்ஞானபூர்வமான ஒரு கணக்கீடு செய்து 8 லட்சம் பேருடைய வயிற்றிலே அடிக்கப்பட்டிருக்கிறது. இது ஓய்வூதிய திட்டமே அல்ல. ஓய்வூதிய திட்டம் என்பது அரசு பணியாளரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல் கொடுப்பதுதான் ஓய்வூதியம்.

34
இதற்காகத்தான் 22 வருடமாக போராடினோமா?

2003 க்கு முன்பு 2.50 லட்சம் பேர் அப்படிதான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் ஏற்கனவே அது ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருந்தது. 2003-ல் இருந்து 22 வருடமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இருக்கக்கூடிய சிபிஎஸ் திட்டத்தைவிட மிக மிக மோசமான ஒரு திட்டமாக இந்த திட்டத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

எப்படி என்று சொன்னால் சிபிஎஸ் திட்டம் என்பது நாங்கள் ஒரு பத்து ரூபாய் கொடுப்போம். அரசு ஒரு 10 ரூபாய் கொடுக்கும். மொத்தமாக ₹20. எங்களுக்கு அந்த இருபது ரூபாயை ரொக்கமாக கையிலே கொடுத்து அனுப்பி விடுவார்கள். டாப்ஸ் என்பது என்னவென்று சொன்னால் நீங்கள் பத்து ரூபாய் உங்கள் பங்கை கொடுங்கள். ஆனால் நாங்கள் எங்கள் பங்கை கொடுக்க மாட்டோம். ஒரு வேலை பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த பற்றாக்குறைக்கு நாங்கள் உங்களுக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உங்களுக்கு ஓய்வுதியும் தருவோம் என்கின்ற இந்த மிக மிக மோசமான இந்த ஒரு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள் எதிர்க்கின்றோம். ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து, லட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இது தர்மமானதா? இப்படி ஒரு ஓய்வு திட்டத்திற்காகத் தான் நாங்கள் 22 வருடமாக கஷ்டப்பட்டு போராடினோமா? என்று நினைக்கின்ற போது மிகவும் வேதனையாக இருக்கிறது’’ என கொந்தளிக்கிறார்.

44
கைவிடப்பட்ட பாராட்டு விழா

சென்னை தலைமைச் செயலகத்துக்கு முன்பே புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம் என்றும் நாங்கள் கேட்காத திட்டத்தை ஏன் கொடுத்தீர்கள்? என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ -ஜியோ முன்னணி நிர்வாகிகள் என அனைவரும் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் நடத்த நடத்த திட்டமிட்டு இருந்த பாராட்டு விழாவை கைவிட்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories