சமூகநீதியா..? சவப்பெட்டியா..? ஸ்டாலினை அதிரவைக்கும் நாடார் சங்க போஸ்டர்..!

Published : Mar 07, 2026, 11:42 AM IST

தென் தமிழகத்தில் சாதி மோதல்களைக் கையாளத் தெரியாமல் விழிக்கும் ஸ்டாலின் அரசுக்கு, இந்தப் போஸ்டர்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவை 2026-ல் வரப்போகும் வீழ்ச்சிக்கான முன்னெச்செரிக்கை என்கிறார்கள்

PREV
13
வார்த்தையில் மட்டுமே சமூக நீதி

தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’ என்று முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்த திமுக-வுக்கு, இப்போது தென் தமிழகத்தின் கோபம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நாடார் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி, இன்று சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம் என எங்கு பார்த்தாலும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினைக் கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றன.

''வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியைக் காப்பாற்றுவேன் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் சாதிய ரீதியாக நடைபெறும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஏன்?" என அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தென் மாவட்டங்களில் சாதி மோதல்களும், அதனால் நிகழும் படுகொலைகளும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன என்பது ஒருபுறம் இருக்க, நாடார் இன மக்களுக்குப் போதிய பாதுகாப்பும், தகுதியான அரசியல் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

23
புறக்கணிக்கப்படுகிறதா நாடார் சமூகம்?

தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூகத் தூண்களாக விளங்கும் நாடார் இன மக்கள், திமுக ஆட்சியில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். குறிப்பாக, சாதி மோதல்களின் போது காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், ஆளுங்கட்சியின் சில முக்கியப் புள்ளிகள் இந்த மோதல்களைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

33
தேர்தல் களத்தில் பாதிப்பு?

தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாடு நாடார் சங்கம் எடுத்துள்ள இந்த நேரடி மல்லுக்கட்டும் நடவடிக்கை திமுக-வின் ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டையைப் போடும் என்பதில் சந்தேகமில்லை. 'சமூகநீதி' என்ற ஒற்றை வார்த்தையை வைத்துப் பிழைப்பு நடத்தும் திமுக-வுக்கு, கள நிலவரமோ வேறாக இருக்கிறது என்கிறார்கள் நாடார் சமுதாய பிரதிநிதிகள்.

தென் தமிழகத்தில் சாதி மோதல்களைக் கையாளத் தெரியாமல் விழிக்கும் ஸ்டாலின் அரசுக்கு, இந்தப் போஸ்டர்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவை 2026-ல் வரப்போகும் வீழ்ச்சிக்கான முன்னெச்செரிக்கை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories