விஜய் தலைமையிலான தவெக நேற்று கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டது. இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் துயர சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பிரச்சாரத்துக்கு சுமார் 10,000 பேர் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 27,000-க்கும் மேற்பட்டோர் கூடினர். விஜயின் ரசிகர்கள், கட்சி ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால் கட்டுப்பாடு இல்லாமல் நெரிசல் ஏற்பட்டது.
500 போலீஸார் மட்டுமே இருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு இல்லை. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி தாமதமானது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவு பாதுகாவலர்களோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லை.
கரூர்-ஈரோடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள சிறிய இடமான வேலுச்சாமிபுரம் நடத்தப்பட்டது. பெரிய மைதானத்தில் அனுமதி கேட்டும் சிறிய இடமே ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.