கூவத்தூரையே மிஞ்சும் பரபரப்பு..! ஓ.பி.எஸ்- டிடிவியின் அடுத்த அதிரடி..! இபிஎஸ் மீது அமித்ஷா கடும் அப்செட்..!

Published : Dec 01, 2025, 03:34 PM IST

எடப்பாடிக்கு கடைசி வாய்ப்பு கொடுப்போம் என்று அமைதியாக இருக்கிறது டிடிவி. தினகரன், ஓபிஎஸ் தரப்பு. எடப்பாடி இறங்கி வரவில்லை என்றால், விஜயை நோக்கி செல்ல தினகரனும், ஓபிஎஸும் தயாராகிவிட்டனர். இருவருமே தவெகவுடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று தெரிகிறது

PREV
15

செங்கோட்டையன் விவகாரத்தில் இறுதியில் அது நடந்தே விட்டது. அதிமுகவிலிருந்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியால் கட்டம் கட்டப்பட்டு நீக்கப்பட்டிருந்தவர் 26 மணி நேர சேசிங் காட்சிகளுக்கு பிறகு விஜயை சந்தித்து அவருடன் கைகோர்த்து விட்டார். இப்போது விவகாரம் செங்கோட்டையுடன் மட்டும் முடியவில்லை. அவரை தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஓ.பி.எஸ் அண்ட் கோ, டிடிவி. தினகரன் ஆகியோரும் விஜயுடன் கைகோர்க்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் காலியாகும் என்று வரும் தகவல்கள் தான் கூவத்தூர் காட்சிகளையே மிஞ்சும் அனல் பறக்கும் அரசியல்.

அரசியல் விமர்சகர் நம்மிடம், ‘‘கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சில விஷயங்களை மனம்விட்டு பேசியிருக்கிறார். அப்போது எஸ்.ஏ. சி சீனியர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டால் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது. கரூர் சம்பவம் போன்ற அசம்பாவிதங்களையும் தவிர்க்கலாம் என அட்வைஸ் செய்தார். இந்த நேரத்தில் தான் மாஜி அமைச்சர் செங்கோட்டை தனக்கு அதிமுகவில் நெருக்கடிகள் அதிகரித்தது. அப்போது புழுங்கித் தவித்த அவருக்கு முதலில் தூண்டில் போட்டது திமுக. ஆனால், திமுக நமக்கு சரியாக வருமா? என யோசனையில் மூழ்கினார் செங்கோட்டையன்.

25

1989-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் ராஜினாமா விவகாரம் குறித்து சட்டசபையில் உச்சகட்ட வெப்பத்தில் விவாதம் நடந்தது. ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி. அப்போது குத்துடா அவனை என தலைமையிடம் இருந்து உத்தரவு பறக்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் கையை மடக்கி கருணாநிதியை நோக்கி குத்தினார் செங்கோட்டையன். இப்படி திமுக எதிர்ப்பு கூறியவர் திமுக செல்வது சரியாக வராது என தயங்கிக் கொண்டிருந்தார்.

உண்மையில் செங்கோட்டையனக்கு கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலை வரை விஜய் கட்சியில் இணையும் எண்ணம் துணியும் இல்லை. இந்த நிலையில் விஜய் நியமனத்திற்கு சுமார் 28 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவினர் ‘‘தமிழக அரசியலைப் பொறுத்தவரை தலைவர்களின் ரோட் ஷோ போன்ற பிரச்சாரங்கள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. கரூரில் அப்படி ஒரு பிரச்சாரத்தில் நாம் ஈடுபட்ட போது தான் பெரும் நெரிசல் ஏற்பட்ட 41 பேர் பலியானார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் அவர்களுக்கான பிரச்சார வியூகம், அவர்கள் செல்லும் ஊர்கள், பாதைகள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு இவற்றையெல்லாம் திறமையாக கையாண்டவர் செங்கோட்டையன். அவரை நமது கட்சியில் இணைத்துக் கொண்டால் பிரச்சார வியூகங்களை வகுப்பதுடன், அதிமுகவின் சீனியர் முகம் என்று கருதப்படும் செங்கோட்டையன் நமது கட்சிக்கு பெரும் பலமாக திகழ்வார் ’’என்று கூறியுள்ளனர்.

35

செங்கோட்டையனை கட்சிக்குள் கொண்டு வரும் பொறுப்பை ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தார் விஜய். அவர்கள் இருவரும் உடனடியாக நவம்பர் 24 அன்று செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசினார்கள். சென்னையில் செங்கோட்டையனை நேரில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, அவருக்கான பதவி பொறுப்புகள், மாவட்ட செயலாளர்களின் 60% பேர் செங்கோட்டையனிடம் ரிப்போர்ட் செய்வது உள்ளிட்ட விஷயங்களை பேசி இருக்கிறார் அப்போதும் செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு வருவது குறித்து எதுவும் பேசவில்லை. இதை அடுத்து தவெக கொள்கை பரப்பு செயலாளரான அருண்ராஜ் செங்கோட்டையனை தொடர்பு கொண்டார். அருண் ராஜின் சொந்த ஊர் சேலம். கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர். அருண்ராஜின் குடும்ப பின்னணிகளும், செங்கோட்டைனின் உறவுகளிடம் பரிட்சயம் இருந்திருக்கிறது.

இதன் பின்னணியில் செங்கோட்டையனை அணுகிய அவர் விஜயிடம் அலைபேசியில் பேச வைத்திருக்கிறார். அந்த அழைப்பில் விஜய் வார்த்தைக்கு வார்த்தை ‘அண்ணா’ எனக்கூறி ‘‘உங்களைப் போன்ற சீனியர்கள் வழிகாட்டுதல், அறிவுரை வேண்டும் என்று நினைத்துதான் உங்களை தவெகவுக்கு அழைக்கிறோம். விஜயகாந்துக்கு அன்றைக்கு பண்ருட்டியார் எப்படி சாரதி போல செயல்பட்டாரோ அப்படி எங்கள் இயக்கத்துக்கு நீங்கள் வழி காட்ட வேண்டும். அதே சமயம் உங்களை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஒருவேளை நீங்கள் கட்சிக்கு வராவிட்டாலும்கூட ஒரு மூத்த அண்ணனாக, மூத்த அரசியல்வாதியாக எங்களுக்கு வழிகாட்டுங்கள்’’ என்று பேசியிருக்கிறார். இந்ப்த பேச்சுக்குப் பிறகு கடந்த திங்களன்று மாலையே தவெகவில் இணைகிறேன் என்கிற உத்தரவாதத்தை ஆதவ், அருண்ராஜ் இருவரிடமும் கொடுத்துவிட்டார் செங்கோட்டையன்.

45

அப்போது செங்கோட்டையன் அடித்த கமெண்ட், ‘‘உங்கள் தலைவர் இவ்வளவு பணிவுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் நிச்சயம் வருகிறேன்’’ என்றும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நவம்பர் 26 அன்று மாலை 5 மணி அளவில் விஜய், செங்கோட்டையன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. விஜய் தரப்பில் செங்கோட்டையன் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனத்துக்கு இணையான பொறுப்பு தரப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

அநேகமாக இந்த வாரத்திலேயே செங்கோட்டையனை அறிமுகப்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தவெக நடத்த வாய்ப்பு இருக்கிறது’’ என்றவர் செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக நடத்திய சேசிங்கையும் விவரித்தார். செங்கோட்டையன் தவெகவுக்கு செல்கிறார் என்கிற தகவல் கிடைத்த உடனே திமுக ஜெர்காகிவிட்டது. இதையடுத்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த அமைச்சரும், செங்கோட்டையனின் நண்பருமான முத்துசாமி, செங்கோட்டையுடன் தொடர்ந்து நல்ல நட்பில் இருக்கும் சேகர்பாபு, கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எப்படியாவது செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்ற அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதாவது நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி பிறந்தநாள். அவர் முதல் முறையாக அன்றைய தினம் அறிவாலயத்தில் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் பரிசாக செங்கோட்டையனை உதய் முன்பாக நிறுத்த வேண்டும் என்று தீவிர முயற்சிகளை மேற்கொண்டது திமுக.

முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் செங்கோட்டையனின் செல்போனை பேசிய நிலையில் சேகர்பாபு நேரடியாகவே செங்கோட்டையனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தரப்பிலிருந்தும் செங்கோட்டையனிடம் பேசினார்கள். அப்போது செங்கோட்டையன் தரப்பு. ‘‘திமுக எதிர்ப்பு அரசியல் செய்து விட்டு என்னால் அங்கு வந்து சர்வைவல் பண்ண முடியாது. அது என் அரசியல் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்து விடும். தவிர கொங்கு மண்டலத்தில் முத்துசாமி மற்றும் பவர்ஃபுல் நபராக செந்தில் பாலாஜி இருக்கும் நிலையில் திமுகவுக்கு வந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்’’ என்று சொல்லி தவிர்த்து இருக்கிறார்.

55

நவம்பர் 26 அன்று மதியம் 12:30 மணியளவில் தலைமை செயலகம் சென்ற செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தார். உண்மையில் செங்கோட்டையன் நவம்பர் 27 அன்று தான் விஜயை சந்தித்து கட்சியில் இணைவதாக இருந்தது. ஆனால், திமுகவின் சேசிங் காரணமாக விஜய் அவசர அழைப்பு விடுக்கவே, நவம்பர் 26 அன்று விஜயை சந்தித்து விட்டார் செங்கோட்டையன். விஜய் 1996 சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவிய பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேறிய சேடப்பட்டி முத்தையா, ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் நேரடியாக தஞ்சம் புகுந்த இடம் திமுக தான். இதன் பிறகுதான் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அவர்கள், அதிருப்தியாளர்கள், திமுகவில் ஐக்கியமாக தொடங்கினர். இதே லாஜிக்கை தான் இப்போது கையில் எடுத்திருக்கிறார் விஜய்.

சீனியரான செங்கோட்டையனை கட்சிக்குள் வளைத்து போட்டால் அதிமுகவிலிருந்து ஜம்பாக கூடியவர்கள் நேரடியாக

தவெகவுக்குள் வருவார்கள். கட்சி வளர்ச்சிக்கும் துணிந்து செலவு செய்வார்கள். லோக்கல் பாலிடிக்ஸில் திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என நினைக்கிறார் விஜய். அதற்கு நடுவே தமிழக அரசியல் அப்டேட்களை தன் கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது எடப்பாடியை நம்பித்தான் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றினார் அமித் ஷா. அதற்கு எடப்பாடி, பாஜகவுக்கு இதுவரை எந்த ரிசல்ட்டுமே கொடுக்கவில்லை. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக. ஆனால் இதற்கு நேர்மாறாக கூட்டணியை தொடர்ந்து பலவீனப்படுத்திக் கொண்டு வருகிறார் எடப்பாடி.

அதேபோல பாஜக கூட்டணியில் ஸ்ட்ராங்காக இருந்த ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறவும், கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டணி வீக்காகவும் காரணம் எடப்பாடி மட்டுமே என நினைக்கிறார் அமித்ஷா. தவிர, பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதிலும் ஜவ்வாக இழுக்கிறார் எடப்பாடி என்பது அமித் ஷாவின் கோபம். இதை அடுத்து எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையில் டெல்லியின் அடுத்த மூவ் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியின் அதிருப்தியாளர்கள் பலரும் பூனைக்கு மணி கட்டுபவர் யார் என்று காத்திருந்த நிலையில் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துவிட்டார் செங்கோட்டையன். அவரது வழியிலேயே பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம் வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்ட சீனியர்களும் அடுத்தடுத்து நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இது நீடித்தால் ஏற்கனவே உடைந்திருக்கும் அதிமுக மேலும் உடைந்து பலவீனமாகும். இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு கடைசி வாய்ப்பு கொடுப்போம் என்று அமைதியாக இருக்கிறது டிடிவி. தினகரன், ஓபிஎஸ் தரப்பு. எடப்பாடி இறங்கி வரவில்லை என்றால், விஜயை நோக்கி செல்ல தினகரனும், ஓபிஎஸும் தயாராகிவிட்டனர். இருவருமே தவெகவுடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று தெரிகிறது’’ என்று விளக்கமாக சொல்லி முடித்தார் அவர்.

Read more Photos on
click me!

Recommended Stories