Kanimozhi Slams Vijay : தவெக எம்.எல்.ஏ விவகாரம்..முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? கனிமொழி சரமாரி கேள்வி

Published : Nov 24, 2026, 12:13 PM IST

Kanimozhi : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி மீண்டும் விமர்சனம் செய்துள்ள நிலையில், விஜய்க்கு கேள்விகள் எழுப்பியுள்ளார்.

PREV
14
தவெக எம்.எல்.ஏ விவகாரம்

தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரம். ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் வாயிலாகத் தகாத மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இந்த விவகாரம் வெளியானபோதே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக மாவட்ட ஆட்சியரே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மீண்டும் குரல் எழுப்பியுள்ள கனிமொழி, பெண்களின் பாதுகாப்பை விட கட்சி எம்.எல்.ஏ.வைப் பாதுகாப்பதுதான் முக்கியமா என முதலமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

24
சர்ச்சையின் பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவிற்கு ஆபாசமான மற்றும் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எம்.எல்.ஏ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 9ஆம் தேதி கனிமொழி, முதலமைச்சர் விஜய் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

கனிமொழி தனது பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

34
மீண்டும் கேள்வி எழுப்பிய கனிமொழி

மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

இந்த விவகாரத்தில் நேற்று (நவம்பர் 23) ஆம் தேதி புதிய திருப்பம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் புகாரில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பொது நிகழ்ச்சிகளின்போது தன்னிடம் முறையற்ற வகையில் நெருங்கி நடந்துகொண்டதாகவும், தனது தோற்றம் மற்றும் உடை குறித்து ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறாரா?

இதையடுத்து கனிமொழி மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்த விவகாரத்தை முன்பே எழுப்பியபோது தன்னையும் மற்ற அரசியல் தலைவர்களையும் அரசியல் செய்வதாக விமர்சித்தவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை முன்னுதாரணமாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.

இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிடத் தனது கட்சி உறுப்பினரைப் பாதுகாப்பதற்கே முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறாரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், நீதி தாமதிக்கப்படுவது நீதியை மறுப்பதற்குச் சமம் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார்”.

ஒருபுறம், தனது கட்சி எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டுகளை தவெக மறுத்து வருகிறது. மறுபுறம், மாவட்ட ஆட்சியரே காவல்துறையை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories