கூட்டணிக்குள் திமுகவின் உள்குத்து..! திடீர் முடிவெடுத்த தவாக வேல்முருகன்..!

Published : Oct 11, 2025, 08:25 PM IST

ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு" எனக் கூறுகிறது அறிவாலயம். விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வேல்முருகனின் செயல்பாடுகளை அதிர்ச்சியாக என விமர்சித்துள்ளனர். 

PREV
13

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், திமுகவுடன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கூட்டணியில் இருந்தபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு, தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் போன்ற விவகாரங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வேல்முருகனின் பேச்சுகளை கண்டித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் "மனநிறைவில்லை என்றாலும் மக்களுக்காக இணைந்தோம்" என பேசினார். பாமகவில் இருந்து விலகி தவாகவை தொடங்கிய வேல்முருகன் தமிழ் தேசியவாதம், வன்னியர் உரிமைகள், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்தாலும், தனது கோரிக்கைகளுக்கு அழுத்தம் தருவதன் மூலம் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக கூறுகிறார். வேல்முருகனை "ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு" எனக் கூறுகிறது அறிவாலயம். விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வேல்முருகனின் செயல்பாடுகளை அதிர்ச்சியாக என விமர்சித்துள்ளனர்.

23

இந்த நிலையில், மூன்று முறை பண்ருட்டி தொகுதியில் இருந்து எம்.எல்,ஏ-வான தவாக தலைவர் வேல்முருகன் இந்த முறை அந்த தொகுதியில் நிற்க போவதில்லை என்று கூறப்படுகிறது. காரணம் திமுக -வினர் உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. 2026-ல் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் மனநிலையில் இப்போது வேல்முருகன் இல்லை என்கிறார்கள்.

33

சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் வாக்குகளை கடந்த தேர்தலில் முழுமையாகப் பெற்றாலும் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே கடந்த முறை வென்றார் வேல்முருகன். இதனால் இந்த முறை அவர் தொகுதியை மாற்றுவதற்கான முடிவிற்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவருடைய சொந்த தொகுதியான நெய்வேலி, புவனகிரி, விருத்தாச்சலம் என ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளிடமும் வெளிப்படையாக சொல்லி வேலை பார்க்க சொல்லி இருக்கிறார் வேல்முருகன் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், ‘‘தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த அளவுக்கு எங்கள் கட்சி பலமாக வளர்ந்து இருக்கிறது. ஆகையால் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories