தவெக கூட்டணி வருமா என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் தேர்தல் வரும்போதுதான் தெரியும். 2019, 2021, 2024 என்று ஒவ்வொரு தேர்தலையும் பாருங்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணியை அறிவித்துள்ளோம். சில சமயம் தேர்தல் அறிவிப்புக்கு ஒருமாதம் முன்பு கூட்டணி பற்றி பேசி முடிவெடுப்போம். ஏனென்றால், அந்தந்த கட்சிகள் வளர வேண்டும். கூட்டணி என்று அமைத்துவிட்டால் கட்டுப்பாடுகள் வந்துவிடும். எங்கள் கூட்டணியில் சேர இருக்கும் கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக செயல்பட முடியாத சூழல் இருக்கிறது.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் பல பேர் எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு அதிக இடம் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கிறார்கள். அவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்திருக்கிறது’’ எனக் கூறினார்.