இந்த அலுவலகத்திலேயே தவெகவின் ஒட்டுமொத்த தேர்தல் வியூக அலுவலகமும், அதற்கான ஊழியர்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. வாய்ஸ் ஆப் காமன்ஸ் உட்பட தவெகவின் வியூக அலுவலகத்தையும் ஒட்டு மொத்தமாக காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த அலுவலகத்தையும் காலி செய்து கொண்டிருக்கிற தவெகவும் ஆதவும், வேற இடத்தில் ஆபீஸ் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வரை இருக்க அனுமதிக்கும்படி ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், உடனடியாக காலி செய்யச் சொல்லி அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.