ஊழல் வழக்குகள் மிகக் குறைவாக உள்ள ஒரே நாடு டென்மார்க்
ஐரோப்பா, அமெரிக்காவில் ஊழல் அதிகரித்துள்ள நிலையில், 2024 உடன் ஒப்பிடும்போது 2025-ல் இந்தியாவில் ஊழல் குற்ற்ச்சாட்டுகள் குறைந்துள்ளன. குளோபல் டிரான்ஸ்பரன்சி வெள்யிடுள்ள அறிக்கையில் 2025-ல் இந்தியாவின் மதிப்பு மேம்பட்டுள்ளது. உலகளவில் ஊழல் அடிப்படையில் இந்தியா இப்போது 91 வது இடத்தில் உள்ளது.
குளோபல் டிரான்ஸ்பரன்சியின் 180 நாடுகளை உள்ளடக்கிய அறிக்கையில், “ஊழல் வழக்குகள் மிகக் குறைவாக உள்ள ஒரே நாடு டென்மார்க். தெற்கு சூடான் , சோமாலியா ஆகியவை உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகள். 80க்கு மேல் மதிப்பெண்களைக் கொண்ட ஏழு நாடுகள் மட்டுமே உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஊழல் பரவியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் மதிப்பெண்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஊழல் வழக்குகளில் ஜெர்மனி மட்டுமே குறைந்துள்ளது. பிரிட்டன் முதல் 20 நாடுகளில் இல்லை.
24
உலகில் 28 வது இடத்தில் அமெரிக்கா
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊழலை அதன் வேரிலிருந்து ஒழிப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதும், அமெரிக்காவின் மதிப்பெண்ணும் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஊழலின் அடிப்படையில் அமெரிக்கா உலகில் 28 வது இடத்தைப் பிடித்தது. அது இப்போது 29 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அனைத்து முயற்சிகள் இருந்தபோதிலும், சீனாவில் ஊழல் வழக்குகள் குறையவில்லை. சீனாவின் மதிப்பெண் 43-ல் அப்படியே உள்ளது. ஊழல் அடிப்படையில் சீனா 76 வது இடத்தில் உள்ளது.
34
இந்தியாவில் ஊழல் குறைவு
2023 ஆம் ஆண்டில், இந்தியா ஊழலின் அடிப்படையில் 93 வது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில், அது ஒரு புள்ளி குறைந்துள்ளது. இந்தியா இப்போது 91வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மதிப்பெண் 39. ஒட்டுமொத்தமாக, ஊழல் குறித்த இந்தியாவின் தரவரிசை கடந்த மூன்று ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முன்னேற்றம் ஏன், எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.
மேலும், ஊழல் குறியீட்டில் 39 மதிப்பெண் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுவதால், ஊழலை ஒழிப்பதில் இந்தியா இன்னும் மற்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
44
கணக்கெடுப்புக்கான அடிப்படை என்ன?
இந்த கணக்கெடுப்பு முதன்மையாக நான்கு காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜனநாயக நிறுவனங்களுக்கு அரசியல் நன்கொடைகள், நிறுவனங்களின் நிலை, அணுகலுக்கான ரொக்கப் பணம் மற்றும் பத்திரிகையாளர்களை அரசு இலக்கு வைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
அறிக்கையை வெளியிட்ட குளோபல் டிரான்ஸ்பரன்சி, "பெரிய சக்திகளுக்கு இடையிலான போட்டி, சர்வதேச விதிமுறைகளை ஆபத்தான முறையில் புறக்கணிப்பதால் உலகளாவிய ஒழுங்கு அழுத்தத்தில் உள்ளது. ஆயுத மோதல், காலநிலை நெருக்கடி ஆகியவை பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகங்களும் மேலும் துருவமுனைக்கப்பட்டு வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள, உலகிற்கு கொள்கை ரீதியான தலைவர்களும், பொது நலனைப் பாதுகாக்க நேர்மையுடன் செயல்படும் வலுவான, சுயாதீன நிறுவனங்களும் தேவை’’ என்று கூறுகிறது.