‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!

Published : Jan 12, 2026, 02:45 PM IST

அப்பாவின் பெயரைக் கெடுப்பதற்கு அங்கே மூன்று பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் காலை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவன் நான் கிடையாது.

PREV
14
அண்ணாமலையை மிரட்டும் சிவசேனா

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது மும்பை மாநகரம் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து விவாதம் ஆகியிருக்கிறது. மும்பைக்கு வந்தால் அண்ணாமலையில் காலை வெட்டுவதாகவும், மேலே மை அடிப்பதாகவும் சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் மிரட்டலுடன் எழுதியிருக்கிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘விவசாயினுடைய பையன் இன்னைக்கு மும்பையில் அவர்கள் கூட்டம் போட்டு திட்டுகிற அளவுக்கு நான் உயர்ந்டது இருக்கிறேனா என்பது தெரியவில்லை. ஆனால்,பால் தாக்கரே மீது மிகப்பெரிய மரியாதை நான் வைத்திருக்கிறேன். பாஜக கட்சியில், நம்முடைய அலுவலகத்தில் நான் மாநில தலைவராக பணியாற்றிய போது இருவரது புகைப்படம் இருக்கும். அதில் ஒன்று சத்திரபதி சிவாஜி. மகாகவி பாரதி, திருவள்ளுவர் எல்லாமே வைத்திருநந்தேன். இன்றைக்கு தாக்கரேவின் சிவசேனா அவர்களுடைய பத்திரிகை சாம்னா. நம்ம முரசொலி போன்ற ஒரு பத்திரிக்கை வைத்திருக்கிறார்கள்.

24
என் காலை வெட்டிப் பார்- அண்ணாமலை சவால்

அதில் எழுதி இருக்கிறார்கள் ‘மும்பைக்கு நான் வந்தால் காலை வெட்டுவேன்’ என்கிறார்கள். நான் மும்பைக்கு வரத்தான் போகிறேன். என் காலை வெட்டிப் பார். இரண்டில் ஒன்று பார்க்கலாம். இந்த மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் பயந்து இருந்தால் நான் என் ஊரில் உட்கார்ந்து இருந்து, என் கிராமத்திற்குள் சொந்த ஊரில் தான் இருந்திருக்க வேண்டும். இரண்டாவது இன்றைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய தலைவர் என்று நான் சொல்லும் பொழுது குஜராத் இல்லை என்று ஆகிவிடுமா? அதே போல காமராஜர் ஐயா அவர்கள் இந்தியாவின் மாபெரும் என்று தலைவர் என்று நான் சொல்லும் போது அவர் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா?

இன்றைக்கு மும்பை உலகத்தினுடைய தலைநகரம் என்று சொல்லும் பொழுது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா? மராட்டிய சகோதர, சகோதரிகளின் உழைப்பால் உயர்ந்த நகரம் இல்லை என்று ஆகிவிடுமா? இது எல்லாமே அந்த நகருக்கு ஒருவர் சொல்லக்கூடிய பெருமை, ஒரு அடையாளம். எப்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய தலைவர், உலகத்தினுடைய தலைவர் என்று சொல்லும் போது அவரது பிறந்த இடமும், பிறந்த மண்ணையும் மறந்து விடுவோமா? மறந்தால் முட்டாள்கள். அறிவில்லாதவர்கள். இந்த சஞ்சய் ராவத் என்று ஒருவர் இருக்கிறார். என்ன பேசுவது என்று தெரியாமல் காலையில் பத்திரிகைகளை சந்தித்து வாந்தி எடுக்காதது மட்டும்தான்.

34
மிரட்டி மிரட்டி பிழைப்பை ஓட்டும் திமுக- சிவசேனா

சஞ்சய் ராவத் வேலையே 6 மணிக்கு வாந்தி எடுக்க வேண்டும். காலையிலேயே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும். இன்று மூன்று தாக்கரேக்களும் கூட்டம் போட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் என்னை அவமானப்படுத்துவது ஒன்றும் புதிது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள திமுக அதைத்தான் காலங்காலமாக செய்து வருகிறது. ஆனால், அவர்கள் தமிழர்களை அவமானப்படுத்துகிறார்கள். இந்த லுங்கி கட்டி, இவர்கள் வேட்டி கட்டியவர்கள், அவர்களெல்லாம் இப்படி, இவர்களெல்லாம் இப்படி.. என்று கேலி செய்கிறார்கள். அதே கூட்டணியில் திமுக இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஆகையால் திமுக தமிழகத்தில் இருக்கட்டும், மும்பையில் இருக்கக்கூடிய ராஜ் தாக்கரே, உத்தவ தாக்கரே, ஆதித்ய தாக்கரேவாக இருக்கட்டும். இவர்களெல்லாம் மிரட்டி மிரட்டி தான் அவர்கள் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

44
விவசாயினுடைய மகன் வளர்ந்திருக்கிறேன்

நாம் பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது பால் ஜி சாஹிப் தாக்கரே இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் இருந்திருக்கவே மாட்டார்கள். அப்பாவின் பெயரைக் கெடுப்பதற்கு அங்கே மூன்று பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் காலை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவன் நான் கிடையாது. அதே நேரத்தில் ஒரு விவசாயினுடைய மகன், கிராமத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய நான், தாக்கரே மீட்டிங் போட்டு லட்சக்கணக்கான ஆட்களை மேடையில் வைத்து திட்டுகிற அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால், அந்த வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி தான் எனக்கு கொடுத்தது. அதற்கு நான் பெருமைப்படுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories