2022 ஜூலை முதல் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்ய சபா தலைவராகவும் இருந்தார். பாஜக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. தன்கர், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக எம்பிக்களுடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டார். அவர் நீதித்துறை மீதான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கினார்.
ஜூலை 2025-ல், நீதிபதி வர்மாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மிகப்பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,கள், நீதிபதி வர்மாவை நீக்கக் கோரி ராஜ்ய சபாவில் தீர்மானத்தை சமர்ப்பித்தனர். தன்கர் இந்த தீர்மானத்தை ஏற்று, விசாரணைக்கு அனுமதித்தார். ஆனால் அவர் மத்திய அரசுக்கு இதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
அரசு தனியாக ராஜ்யசபாவில் தனியாக இதே போன்ற தீர்மானத்தை தயார் செய்து கொண்டிருந்தது. தன்கரின் தன்னிச்சையான முடிவு அரசின் திட்டத்தை சீர்குலைத்ததாகக் கருதப்பட்டது. இதனால், அரசு தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது.