அதாவது, 2026 தமிழக சட்டசபை தேர்தல் சீட்டு பங்கீடு தொடர்பாக காங்கிரஸின் ஐவர் குழு, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தற்கு மத்தியில், விஜய்யை, ராகுலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தது விவாதங்களை கிளப்பியது. சமீபத்தில் விஜய்யைப் பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்த பிரவீன் சர்க்கரவர்த்தி, ‘‘விஜய்க்கு தானாக கூட்டம் கூடுகிறது. மற்ற கட்சிகளுக்கு அப்படி கூடுவதில்லை’’ எனவும் பாராட்டி இருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர், பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது ராகுல் காந்தியை கோபப்படுத்தியதாகவும், காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி வாய்ப்பு கேட்டபோது திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக சீட் கிடைக்காமல் போனது. இதனால் திமுக மீது அதிப்தியில் இருந்த பிரவீன் சக்கரவர்த்தி திமுக கூட்டணியை விரும்பாமல் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என விஜயுடன் கூட்டணி குறித்து பேசியுள்ளார் என்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணியை தொடர உறுதி முடிவெடுத்தால் பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் தவெகவில் இணைய முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.