அதிமுக திமுக கூட்டணி அமையுமா? விஜயை பழிவாங்க நடக்கப்போகும் ட்விஸ்ட்? தாய் கழகத்துடன் கை கோர்க்குமா அதிமுக?

Published : May 04, 2026, 05:47 PM IST

Can DMK and ADMK join hands in 2026? : சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் திமுக அதிமுக கூட்டணி ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விரிவான விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
அதிமுக திமுக கூட்டணி அமையுமா?

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மிகப்பெரிய சர்வை சந்தித்துள்ளன. புதிதாக களம் காணும் தவெக 150 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 76 தொகுதிகளிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்த வருகின்றன. எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து களம் கண்ட விஜயின் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாய்ப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

27
திமுக - அதிமுக நிலைப்பாடு என்ன?

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் எதுவும் சாத்தியம் என்றாலும் திமுக அதிமுக கூட்டணி என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. இரண்டுமே திராவிடக் கொள்கைகளை பேசினாலும் ஒன்றுக்கொன்று எதிர் எதிர் துருவங்களாகவே உருவெடுத்தன. ஒன்று அழிந்தால் தான் மற்றொன்று வாழ முடியும் என்கிற அரசியலே இங்கு நிலவுகிறது.

37
தவெக அதிமுக கூட்டணி அமையுமா?

அதிமுகவின் தாய்க் கழகமான திமுகவுடன் கைகோர்ப்பது என்பது இரு கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால், மற்றொரு கட்சி எதிர்க்கட்சியாக இருப்பது தமிழகத்தின் வழக்கம். இரண்டு பேரும் இணைந்தால் மாற்று அரசியலை தேடும் மக்கள் தவெக அல்லது நாம் தமிழர் போன்ற கட்சிகளையே முழுமையாக தேர்ந்தெடுப்பார்கள். எனவே திமுக அதிமுக கூட்டணி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. அதேசமயம் தவெக 105 அதிமுக 53 என சேர்த்தால் 150-க்கும் மேற்பட்ட இடங்கள் வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் வலுவான ஆட்சியை அமைக்க முடியும்.

47
தவெக அதிமுக கூட்டணி அமைந்தால் சாதகம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதிமுகவிற்கு மீண்டும் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும். ஐந்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத அதிமுகவிற்கு இது புத்துயிர் அளிக்கும். மேலும் விஜயின் அரசியல் அனுபவமின்மையை ஈடுகட்ட, அதிமுகவின் நிர்வாக அனுபவம் உதவும். விஜய் முதல்வர், அதிமுகவிற்கு துணை முதல்வர் அல்லது முக்கிய அமைச்சரவை என்கிற உடன்பாடு ஏற்படலாம். திமுகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பது என்ற பொதுவான நோக்கத்திற்கு இவ்விரு கட்சிகளும் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. சாதகங்கள் இருக்கும் அதை அளவிற்கு அதிமுகவிற்கு தவெக உடனான கூட்டணியில் பல பாதகங்களும் உள்ளது.

57
தவெக அதிமுக கூட்டணி அமைந்தால் பாதகம் என்ன?

ஒரு புதிய கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதிமுக தனது இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராட்ட வேண்டி இருக்கும். காலப்போக்கில் அதிமுகவின் வங்கியை தவெகவுடன் கரைய வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிச்சாமி போன்ற மூத்த தலைவர்கள், புதிய அரசியல் வரமவான விஜயின் கீழ் பணி புரிய விரும்புவார்களா என்பது மிகப்பெரிய கேள்வி குறி. துணை முதல்வர், முக்கிய இலாக்கள் போன்ற அதிகாரப் பகிர்வின் போது இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கூட்டணி அமைச்சரவை எப்போதும் தோல்வியையே சந்திக்கும் என்பதற்கு இந்தியாவில் பல உதாரணங்கள் உள்ளன. எனவே இது போன்ற விஷயங்கள் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு வழி வகுக்கலாம்.

67
பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

மே 4, 2026 மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் ஒரு தொங்கு சட்டமன்றத்தை நோக்கி செல்கிறது. விஜய் தனித்துப் போட்டி என்று அறிவித்திருந்தாலும் பெரும்பான்மையை எட்ட அவருக்கு கூடுதல் இடங்கள் தேவை. அவர் அதிமுகவின் ஆதரவை நாடலாம் அல்லது திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் போன்ற கட்சிகளை இழுக்க முயற்சி செய்யலாம். தனிப்பெரும் கட்சியான தவெகவை முதலில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அப்போது விஜய் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க அதிமுகவின் வெளியில் இருந்து ஆதரவைக் கூட பெற வாய்ப்பு இருக்கிறது.

77
அதிமுக என்ன செய்யப்போகிறது?

சுருக்கமாகச் சொன்னால் அதிமுகவும், திமுகவும் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. மறுபுறம் விஜய்யின் தவெக மற்றும் அதிமுக இணைந்தால் அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக இருக்கும். ஆனால் அதிமுகவிற்கு அதிகாரப் பங்கு கிடைத்தாலும், இரண்டாம் இடம் மற்றும் கட்சியின் தனித்துவம் சிதையும் அபாயமும் உள்ளது. விஜய் அதிகாரப் பகிர்வு என்னும் ஆயுதத்தை ஏந்தி அதிமுகவை வளர்ப்பாரா? அல்லது அதிமுக தனது தனித்துவத்தை காக்க எதிர்க்கட்சி வரிசையில் அமருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories