C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!

Published : Jul 02, 2026, 10:29 AM IST

அதிமுகவின் முக்கிய தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

PREV
15
தவெக தூணாக மாறிய அதிமுக தூண்

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிர்வை இன்று சந்தித்துள்ளது. மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும், அதிமுகவின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று (ஜூலை 2) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக அரசியல் சவால் விடுத்து, மாமல்லபுரத்தில் அலைகடலெனத் திரண்ட தொண்டர்கள் மத்தியில் சி.விஜயபாஸ்கர் நடத்திய இந்த மெகா அரசியல் ஷோ, கோட்டை வரை எதிரொலித்துள்ளது.

25
மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி!

புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் சி.விஜயபாஸ்கருக்கு இருக்கும் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக இன்றைய விழா அமைந்தது. அதிகாலை முதலே சுமார் 200 சொகுசுப் பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான கார்கள் அணிவகுக்க, சென்னை - மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) முற்றிலும் முடங்கியது.

ஜெயலலிதா காலத்து தீவிர விசுவாசிகள் பலரும் விஜயபாஸ்கரின் பின்னால் அணிவகுத்து வர, மாமல்லபுரம் முழுக்க தவெக மற்றும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களால் மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.ஆனந்தன்,  முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் ஆகியோரும் தவெக-வில் இணைந்து எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

35
"ஒட்டுமொத்த டெல்டாவே காலியாகிறது" – எடப்பாடிக்கு நேரடி சவால்!

கட்சியில் இணைந்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமைக்கு எதிராகத் தனது அரசியல் சீற்றத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது. “தலைமையில் இருக்கக்கூடிய ஒருவரின் (எடப்பாடி பழனிசாமி) தவறான, சுயநலமான முடிவின் காரணமாகத்தான், இன்று மாமல்லபுரத்தில் கடல்போல் மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியைப் பார்த்தால் அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்த டெல்டாவே காலியாகும் நிலைமைதான் இப்போது இருந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளமான எதிர்காலத்திற்குப் புதிய திசையை உருவாக்கி வரும் தவெக தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்!” என்று எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்தார் விஜயபாஸ்கர்.

45
தொண்டர்களுக்கு சுடச்சுட சாப்பாடு – திகைத்துப் போன அரசியல் களம்!

தனது அழைப்பை ஏற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரண்டு வந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் தனது பாணியில் கவனித்து அசத்தினார் விஜயபாஸ்கர். மாமல்லபுரத்தின் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாக சுடச்சுட தடபுடல் பிரியாணி மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பசியாரிய தொண்டர்கள் "தளபதி விஜய் வாழ்க!", "அண்ணன் விஜயபாஸ்கர் வாழ்க!" என முழக்கமிட்ட முழக்கம் மாமல்லபுரம் கடற்கரை முழுவதையும் அதிரச் செய்தது.

55
2026-க்கான திசைமாறும் அரசியல் திசை!

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக வலம் வந்த சி.விஜயபாஸ்கர், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்து, தனது ஒட்டுமொத்த பலத்தோடு தவெக-வில் ஐக்கியமாகியிருப்பது திராவிட அரசியல் கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. 200 பேருந்துகள், ஆயிரக்கணக்கான கார்கள், சுடச்சுட உணவு என மாமல்லபுரத்தையே ஸ்தம்பிக்க வைத்த இந்த 'மாஸ்' அரசியல் நகர்வு, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு தவிர்க்க முடியாத இமாலய சக்தியாக மாற்றியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories