புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தாண்டி கட்சி விவகாரங்களை விஜயிடம் கொண்டு செல்வது இல்லை என்றும் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் கட்சியை வலுப்படுத்த முயற்சிக்காமல் தங்களை முன்னிலைப்படுத்தவே முயன்றதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்தன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அவர்கள் மீதான விரக்தியை மேலும் தீவிரமாகி உள்ளது.
மிகப்பெரிய சவாலோ, நெருக்கடியோ வரும் நேரத்தில் கட்சி தலைமை இவ்வளவு பெரிய மௌனம் சாதிப்பது சரியா? என கேள்விக்கு எழுப்ப ஆரம்பித்து இருக்கிற விஜய் ரசிகர்கள், அவர்களது கோபத்தை விஜய்க்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி மீது திருப்பி இருக்கிறார்கள்.
கைதுக்கு பயந்து கொண்டு தலைமுறைவான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்களே தவிர, தொண்டர்களை அடுத்து என்ன செய்ய வேண்டும்? கரூர் விவாகரத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும்? நிலைமையை எப்படி கையாள வேண்டும்? என எதையும் சொல்லத் தெரியாமல் ஏன் மறைந்து போனார்கள்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றர்.