சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் காவல்துறையினர், பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும்ம் இவை அனைத்தும் புரளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஒவ்வொரு மிரட்டலுக்கும் காவல்துறையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு (BDDS) மோப்ப நாய்களுடன் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இது போன்ற மிரட்டல்கள் பதிவாகியுள்ளன.
இந்த மிரட்டல்கள் பிரபலங்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள், பொது இடங்களை இலக்காகக் கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் ரவி மாளிகை, பாஜக தலைமையகம், நடிகை த்ரிஷா வீடு, எஸ்.வி. சேகர் வீடு, டிஜிபி அலுவலகம், யூடியூபர்கள் வீடு, தொலைக்காட்சி அலுவலகம், விஜயின் நீலங்கரை வீடு என பல இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன.