SIR பணிகளால் அழுத்தம்..! தமிழகம், கேரளாவில் கொத்துக் கொத்தாய் பி.எல்.ஓ-க்கள் தற்கொலை..! தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம்..!

Published : Nov 22, 2025, 07:33 PM IST

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பி.எல்.ஓ.க்களின் இறப்புகள் குறித்து அந்தந்த மாநிலங்களிம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கைகளைக் கோரியிருக்கும் நிலையில், கேரளாவில் பி.எல்.ஓ.க்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

PREV
15

பீகாருக்குப் பிறகு, ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை செயல்முறை நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டில் பி.எல்.ஓ (பிளாக் லெவல் அதிகாரி) மிக முக்கியமான பொறுப்பை வகிக்கிறார். அவர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து சேகரிக்கின்றனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஓ.க்கள் பணிச்சுமையால் அடுத்தடுத்து தற்கொலை செய்வது கொள்வது அதிகரிப்படு

இந்தியாவில் கடந்த 2002-2003ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கி உள்ளது. போலி வாக்காளர்களை கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கையாக இந்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. பீகாரில் இந்த பணி முழுவதுமாக நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4ம் தேதி இந்த பணி தொடங்கியது.மொத்தம் 51 கோடி வாக்காளர்களின் உரிமையை சரிபார்க்கும் பணி பிஎல்ஓ எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்னறர். இந்த பணி டிசம்பர் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

25

இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் தற்கொலை செய்து வருவது திடுக்கிட வைத்துள்ளது. பி.எல்.ஓ.க்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிக பணிச்சுமை, குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இது பி.எல்.ஓ.க்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வழிவகுக்கிறது. பி.எல்.ஓ.க்களின் தற்கொலைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில்,பாஜக கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல லட்சம் பேரின் வாக்குரிமை இதன் வழியாக பறிக்கப்படும் எனக்கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் எஸ்.ஐ.ஆர் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, எஸ்.ஐ.ஆர் செயல்முறையை நிறுத்தி வைக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

35

மூன்று வருட செயல்முறையை மூன்று மாதங்களில் முடிக்க தேர்தல் ஆணையம் பி.எல்.ஓக்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது பி.எல்.ஓ-க்கள் தற்கொலைக்கு வழிவகுப்பதாக அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் 2 பி.எல்.ஓக்கள் அழுத்தம் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பானர்ஜி முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்ட்டுள்ளார்.

இன்று, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மாவட்டத்தில் மற்றொரு பெண் பி.எல்.ஓ தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் 54 வயதான ரிங்கு தரஃப்தார் . சோப்ராவில் உள்ள பங்கல்ஜி சுவாமி விவேகானந்த வித்யா மந்திரில் பகுதிநேர ஆசிரியராகவும், சோப்ரா துய் பஞ்சாயத்தில் உள்ள 201வது பூத்தின் பி.எல்.ஓ-வாகவும் இருந்தார். கிருஷ்ணாநகரின் ஆறாவது மாடியில் வசித்து வந்த அவர், நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. தனது தற்கொலைக் குறிப்பில், எஸ்.ஐ.ஆர் செயல்முறையின் அழுத்தம் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், மம்தா பானர்ஜியின் அரசு, மேற்கு வங்க அரசு இறந்த பி.எல்.ஓ-க்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், பணியில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ₹1 லட்சமும் வழங்கும் என்று அறிவித்துள்ளது.

45

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளாவிலும் இந்த வகையான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.மத்தியப் பிரதேசத்தின் தாதியாவில் பி.எல்.ஓ உதய்பன்,ம் ஜபுவாவில் பி.எல்.ஓ புவன் சிங் சவுகான் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதேபோல், குஜராத்தின் கிர் சோம்நாத்தில் 40 வயதான பி.எல்.ஓ அரவிந்த் முக்ரி பாதர், கெடாவில் 50 வயதான ரமேஷ் பாய் பர்மர் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் பி.எல்.ஓ. ஹரியோம் பைர்வாவும், ஜெய்ப்பூரில் முகேஷ் ஜாங்கித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

கேரளாவின் கண்ணூரில் அனீஸ் ஜார்ஜும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சிவனார்தங்கல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜாகிய்ஹா பேகம். இவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஜாகிதா பேகம் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஜாகிதா பேகம் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கும்பகோணத்தில் எஸ்.ஐ.ஆர் பணியின்போது உயர் அதிகாரி தரக்குறைவாக பேசியதாக அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

55

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளாவைத் தொடர்ந்து, மோடி-ஷாவின் குஜராத்தில் ஒரு பி.எல்.ஓ இப்போது எஸ்.ஐ.ஆரின் அதிகப்படியான அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. குஜராத் பி.எல்.ஓ. அரவிந்த் வாதர் தற்கொலைக்கு முன், "நான் இனி எஸ்.ஐ.ஆரின் வேலையைச் செய்ய முடியாது" என்று எழுதியுள்ளார்.

9 மாநிலங்களிலும் பி.எல்.ஓ.க்கள் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும், துரதிர்ஷ்டவசமாக, சிலர் அதிக பணிச்சுமை காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிகப்படியான பணிச்சுமை, பி.எல்.ஓ.க்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த தொடர்ச்சியான மரணங்களுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்குமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பி.எல்.ஓ.க்களின் இறப்புகள் குறித்து அந்தந்த மாநிலங்களிம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கைகளைக் கோரியிருக்கும் நிலையில், கேரளாவில் பி.எல்.ஓ.க்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories