விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக கேரளாவில் விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டை விட அதிகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா
போன்ற மாநிலங்களில் விஜய்க்கென்று ஐ.டி. விங் அணிகள் செயல்படுகின்றன. பெங்களூரு, மும்பை, பூனே, நவி மும்பை, அவுரங்காபாத், தானே போன்ற நகரங்களில் விஜய்க்கு வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. சண்டிகார், அமிர்த்தசரஸ், ஜலந்தர், குருகிராம், ஃபரிதாபாத், இந்தூர், உஜ்ஜைன், சுரத், அல்மோரா, ஜெய்சல்மர் போன்ற இடங்களிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. தாய்லாந்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இலங்கையில் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆக, இதையெல்லாம் கணக்கில் கொண்டு தன்னுடன் கூட்டணிக்கு வரும் தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணையலாம் என்கிற எண்ணமும் விஜயிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.