விஜய்க்கு இவ்வளவு நெருக்கடியா..? சென்னையை தேர்ந்தெடுத்தது ஏன்..? 27-ம் தேதி பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு..!

Published : Oct 25, 2025, 09:38 AM IST

கரூர் மக்களை சந்தித்து விடக் கூடாது என்று பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மனது விட்டு பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

PREV
14

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 ஆம் தேதி மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்த எங்கள் தலைவர் விரும்புகிறார். அவர்களுடன் ஐந்து முதல் ஆறு மணி நேரம் செலவிடலாம். சென்னை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல் பகுதியாக இருக்கிறது. மாமல்லபுரத்தில் இடத்தை இறுதி செய்வதற்கான இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.

கரூரில் ஒரு இடத்தைப் பாதுகாப்பது ஒரு இமாலய வேலையாக இருக்கிறது. கரூரில் பல இடங்களை நாங்கள் முயற்சித்தோம், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. கரூர் காவல்துறையினர் பரிந்துரைத்த இடம் தலைவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இல்லை. அங்கு சுற்றுச்சுவர் இல்லை. அது ஒரு கிடங்கு போல இருந்தது. அங்கு எப்படி பலரை தங்க வைக்க முடியும்? அங்கு கூட்டத்தை நிர்வகிப்பது கடினமாக இருந்திருக்கும். எனவே அந்த இடத்தை நாங்கள் நிராகரித்தோம்.

ஒரு குடும்பத்தைத் தவிர, மற்றவர்கள் தலைவரைச் சந்திக்க எங்கும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர்’’ என தவெக

வட்டாரங்கள் கூறுகின்றனர்.

24

‘‘கரூர் செல்வதற்கு இந்த நிமிடம் வரை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பல இடங்களில் அனுமதி கேட்டோம். காலையில் அனுமதி என்று சொல்கிறார்கள். மாலை அனுமதி மறுப்பு என்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உணர்வுப் பூர்வமாக மனம் விட்டு நீண்ட நேரம் பேச வேண்டும் என்று திட்டம் வகுத்து வேலை செய்து வருகிறோம். அந்த சூழலை தடுக்க பல வழிகளில் தடை செய்து வருகிறார்கள். இடம் கொடுத்தவர்களையும் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

34

பாதிக்கப்பட்ட மக்களும் கரூரில் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், வேறு எங்கு சரியான இடம் கிடைத்தாலும் சந்திக்க வருகிறோம் என்று தெரிவித்து உள்ளார்கள். சந்திக்கும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு சூழல் நிறைந்த இடத்தை தேடி வருகிறோம்.

சென்னை உட்பட ஏனைய எந்த மாவட்டத்தில் இடம் கிடைத்தாலும் உள்ள உணர்வோடு மக்களை சந்தித்து விட வேண்டும் என்று வீரியமாக செயல்பட்டு வருகிறோம். கரூரில் மக்களை சந்திக்கும் பாதுகாப்பு சூழல் தற்பொழுது வரை இல்லை. எந்த பிரச்சனையும் யாருக்கும் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பலரின் அழுத்தம் சொல்ல முடியாத துயரத்தை தருகிறது. கரூர் மக்களை சந்தித்து விடக் கூடாது என்று பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள்.

44

எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மனது விட்டு பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரச்சனை இல்லாத பாதுகாப்பு சூழல் நிறைந்த சரியான இடம் கிடைத்த உடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க கூடிய நேரம், இடம் ஆகியவற்றை தலைமை சார்பாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வரும்’’ என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories