பாஜகவில் அண்ணாமலையை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. அது இரும்பு திரையில் உள்ள கட்சி. நயினார் நாகேந்திரனை பதவியில் அமர்த்தி விட்டு இவரை தூக்கி எறிந்து விட்டார்கள். ஆகையால் இவர் மனம் உடைந்து விட்டார். ஒரு முடிவெடுத்து விடலாமே, ஐபிஎஸ் படித்து நாம் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடாது? என நினைக்கிறார். அண்ணாமலை விஜயுடன் இருந்தால் மக்கள் மனதில் ஒரு பெரிய மாற்றம் நிகழும். இவர்கள் இருவரும் சேர்ந்தால் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வீழ்த்த முடியும்.
செங்கோட்டையனும், அண்ணாமலையும் தொண்டர்களிடம் செல்பவர்கள். செந்தில் பாலாஜியின் அரசியல் கரன்சி அரசியல். அதிமுகவில் இருக்கும் போதும், திமுகவில் இருக்கும் போதும் கரன்சி அரசியல்தான் செய்தார். உள்ளாட்சி மன்ற தேர்தலில் எல்லோருக்கும் கரன்சி கொடுத்தார். இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் அவர் பரிசு அரசியல் செய்தார். ஆகையால், அண்ணாமலை, செங்கோட்டையன் இணைந்து கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் அரசியலை சரிக்க வாய்ப்புள்ளது.