இழுக்கும் அமித்ஷா... இறங்கி வராத இபிஎஸ்.! தூண்டில் போட்டு காத்திருக்கும் விஜய்..!

Published : Jan 06, 2026, 01:11 PM IST

160 தொகுதிக்குள் சுருக்கிக்கொள்ள சொல்லி பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உறுதியோடு இருப்பதால் இன்னும் இழுபறி நீடிப்பதாக சொல்கிறார்கள்.

PREV
14

தமிழகம் வருகை தந்த அமித் ஷா, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நடத்திய பேச்சு வார்த்தையில் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என விஜய்க்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் டிடிவி.தினகரன் பேசி இருப்பது கவனிக்க வைத்துள்ளது. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டிருக்கும் தேமுதிக அறிவிப்பு வெளியிட ஜனவரி ஒன்பதாம் தேதி நாள் குறித்து இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் என்னப்பட்டு வருகிறது. கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசியல் களமும் பரபரப்பாக மாறி வருகிறது. அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அமித் ஷா. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹோட்டலில் இரண்டாவது நாளாக வேலுமணியை சந்தித்த அமித் ஷா அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த வகையில் 170 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில்க் போட்டி என்பதில் உறுதியோடு இருக்கும் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்ததால் பேச்சில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

24

160 தொகுதிக்குள் சுருக்கிக்கொள்ள சொல்லி பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உறுதியோடு இருப்பதால் இன்னும் இழுபறி நீடிப்பதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியில் அமமுகவும், ஓபிஎஸும், தேமுதிகவும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில் பாமகவும் 30 தொகுதிகளுக்கு கீழே குறையக்கூடாது என கண்டிப்பு காட்டி வருகிறது. கூட்டணியை பலப்படுத்தும் வகையில் தொகுதிகளை குறைத்துக்கொள்ள சொல்லி பாஜக வலியுறுத்தினாலும், அதிமுக மேலிடத்தில் இருந்து சுமூகமான பதில் கிடைக்கவில்லை. கூட்டணிக்கு வரவருக்கும் ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து பிரித்துக் கொடுக்க பாஜக கணக்கு போடுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு 170-ல் உறுதியாக இருக்க, தை மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, பிரேமலதா, டிடிவி ஆகியோரை ஒரே மேடையில் அமர்த்தி காட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கிறது.

அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என முனைப்பு காட்டுகிறார்கள். இதனால்தான் திருச்சியில் இருந்து 1.20 மணிக்கு டெல்லிக்கு புறப்பட வேண்டிய அமித் ஷா ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 2:30 மணிக்கு மேல் புறப்பட்டு விமான நிலையம் சென்று இருக்கிறார் என்கிறது பாஜக வட்டாரம். அதிமுக, பாஜக கள நிலவரம் இப்படி என்றால், தஞ்சாவூரில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய அக்கட்சியின் டிடிவி.தினகரன், விஜய்க்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் பேசி இருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. கூட்டத்தில் பேசிய டிடிவி.தினகரன் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சியில் அமமுக இடம்பெறும் என்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் மன ஓட்டம் அறிந்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

34

கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவோம். அமமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என டிடிவி தினகரன் பேச பேச கூட்டத்தில் ஆரவாரமும் கூடியது. கௌரவமான இடங்களை பெறுகின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுகின்ற கூட்டணிக்கு தான் நாம் செல்ல இருக்கிறோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கௌரவமான இடங்களை பெற்று ஆட்சி அமைப்போம். கூட்டணியின் ஆட்சி அமைப்போம். அதிலே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள்’’ எனப்பேசினார் டிடிவி. தமிழ்நாட்டில் தற்போதைக்கு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் மட்டுமே வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில் டிடிவி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்து விஜயை புகழ்ந்து பேசி வருகிறார்.

தற்போது விஜயுடன் கூட்டணி என டிடிவி சொல்லாமல் சொல்லி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதோடு பொதுக்குழு கூட்டத்தில் பிரிவினைவாத அரசியலை தமிழகத்தில் ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என டிடிவி நிறைவேற்றிய தீர்மானமும் பாஜகவிற்கு எதிரான தீர்மானமாக பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அமுமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் டிடிவி, பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. டிடிவி.தினகரன் நிலைப்பாடு இப்படி என்றால், தேமுதிகவும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

44

கோயம்பேடு அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ரகசிய பெட்டி வைத்து தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துகள் அடிப்படையில் வரும் ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நடக்கும் மாநாட்டில் யாருடன் கூட்டணி அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்திருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதாவிடம் 2026-ல் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தற்போதைக்கு சட்டமன்ற தேர்தலில் மட்டுமே தங்களின் முழு கவனமும் இருப்பதாக தெரிவித்தார். இப்போது நடக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். இதில் எங்கள் கழகம் விரும்பும் கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார்.

தேமுதிக கூட்டணிக்குள் இழுக்க திமுக தரப்பிலிருந்து வட மாவட்ட அமைச்சரான எ.வ.வேலு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர் வேலுமணியும், பாஜக சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார். அண்மையில் நடைபெற்ற கேப்டன் குருபூஜை விழாவில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலினும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories