இந்நிலையில் தற்போது சிபிஐ விசாரணை உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட அனைவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது விஜயின் கார் டிரைவர் அளித்த வாக்குமூலத்தில் சில விஷயங்களை சொல்லி இருப்பது விஜய்க்கு எதிராக ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்தோடு விஜயின் பிரச்சார வேனில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் விஜய்க்கு எதிராக பல தகவல்கள் அடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில வெகுவிரைவிலேயே விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி முடித்த பிறகு சிபிஐ தனது அறிக்கையை வெளியிட காத்திருக்கிறது. விசாரணை முடிவுகள் விஜய்க்கு எதிராக திரும்புமேயானால் உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்களை வேகமாக கைது செய்ய வேண்டும் என முடிவெடுத்டு இருப்பதாகவும் சொல்கின்றார்கள். இது தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக முடித்து விட வேண்டும் என்கின்ற திட்டமும் சிபிஐயிடம் இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஜய் ஆகிய மூவரும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்த சூழல் உருவானால் விஜய் தேர்தல் களத்தில் போட்டியிடுவது கேள்விக்குறியாகும் என்கின்றார்கள்.