ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?

Published : May 06, 2026, 12:08 PM IST

ADMK TVK Alliance : சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தவெகவிற்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் போர் கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
16
பெரும்பான்மை கிடைக்காத சூழல்

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது.

26
காங்கிரஸ் ஆதரவு தர முடிவு

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவெகவுடன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக விஜயை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸிடம் ஐந்து எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் தவெகவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்ற செய்தி வருகிறது. அதே சமயம் திமுகவில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளான முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரி கட்சிகள் ஆகியவை தவெகவிற்கு ஆதரவு இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளனர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினை நேராக சந்தித்து திமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளனர்.

36
சி.வி சண்முகத்தை அணுகிய தவெக

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவிடம் தவெக தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பாமகவிடம் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், தவெகவின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் துணை முதலமைச்சர் பதவி மற்றும் முக்கிய துறைகளை அன்புமணி கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. ஒருவேளை காங்கிரஸ் மற்றும் பாமக இரு கட்சிகளும் விஜயை ஆதரிக்கும் பட்சத்தில் மேலும் மூன்று இடங்கள் விஜய்க்கு தேவைப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவை தவெகவை கூட்டணிக்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டு சி.வி சண்முகத்தை தவெக அணுகியுள்ளது.

46
சி.வி சண்முகம் தலைமையில் 30 எம்எல்ஏக்கள்

தவெகவிற்கு ஆதரவு தரக்கோரி செங்கோட்டையன் எஸ்.பி. வேலுமணியை அணுகியதாகவும், எஸ்.பி வேலுமணியோ, எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து தன்னால் அரசியல் செய்ய முடியாது என்பதால் சி.வி சண்முகத்தை அணுகுமாறும், அவருக்கு அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அவரிடம் பேசுங்கள் என்று செங்கோட்டையனிடம் கூறியதாக தகவல் கசிந்துள்ளது. வட தமிழகத்தில் அதிமுகவின் வலிமை பெற்றவராக சி.வி சண்முகம் திகழ்ந்து வருகிறார். மேலும் இவரது கட்டுப்பாட்டில் 15 வன்னியர் சமூகத்தின் எம்எல்ஏக்களும் இருக்கின்றனர். எனவே சிவி சண்முகத்தை வைத்து அதிமுகவை உடைக்கும் திட்டத்தில் செங்கோட்டையன் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

56
அதிமுக சட்டமன்ற தலைவராகும் சி.வி சண்முகம்

இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு சி.வி சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கூடிய விவாதித்துள்ளனர். அப்போது சட்டமன்ற அதிமுக தலைவராக சி.வி சண்முகத்தை தேர்வு செய்வது என்றும், அவரது தலைமையில் தவெகவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் சி.வி சண்முகத்தை ஆதரிப்பதால் அதிமுக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் சி.வி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “அதிமுக-தவெக கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும், தான் எதுவும் கூற முடியாது” என்று கூறிச் சென்றார்.

66
வெளியான செய்திக்கு மறுப்பு

இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அளித்த பேட்டியில், “தற்போது வரை தவெகவிலிருந்து யாரும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பவில்லை. அதிமுக தரப்பிலும் யாரும் தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்பு கொள்ளவில்லை. எங்களிடம் யாரும் ஆதரவும் கேட்கவில்லை. அப்படி கேட்டால் கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories