லீக்கான அமித்ஷா கொடுத்த 50 தொகுதிகள்.. அதிமுகவுக்கு அடியோடு ஆப்பு... தலைகீழாக மாறும் எடப்பாடி கணக்கு..!

Published : Jan 08, 2026, 07:35 PM IST

திமுக ஆட்சி அமைத்தாலும் இரண்டாவது மெஜாரிட்டியாக பாஜக இருந்திட வேண்டும். எடப்பாடி இருந்து விடகூடாது. பாஜகவை சார்ந்தவர் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும். அதுதான் பாஜகவின் இலக்காக இருக்கிறது.

PREV
14
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

இரண்டு முறை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்வேலுமணியை திருச்சியில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார் அமித் ஷா. முதல் நாள் நேரடியாக வேலுமணியை மிரட்டி இருக்கிறார் அமித்ஷா. இரண்டாவது நாளும் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. இந்த இரண்டு முறை பேச்சுவார்த்தை முடிநந்தவுடன் அன்புமணியுடன் அதிமுகவோடு கூட்டணியை வந்து உறுதிப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த உறுதிப்பாடு முடிந்த உடனேயே எடப்பாடி நேராக டெல்லி போய் டெல்லியில் அமித் ஷாவை சந்திக்கிறார். எல்லாமே ஒரு மூன்று, நான்கு நாட்களில் நடக்கிறது.

இது மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அமித் ஷா, எடப்பாடியிடம் வெளிப்படையாக எங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் எனச் சொல்லி அது எந்தெந்த தொகுதிகள் என்று நான் கொடுப்பேன். நீங்கள் எங்களுக்கு பலம் இல்லாத, நீங்கள் ஜெயிக்க முடியாத தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுக்கு வேண்டாத அந்த தொகுதி எல்லாம் எங்களுக்கு தேவை கிடையாது. எங்களுக்கு என்னென்ன தொகுதி வேண்டுமோ அதை நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுங்கள் எனச் சொல்லி வெளிப்படையாக ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார்.

24
அதிமுக தொகுதிகளுக்கு குறி வைக்கும் அமித் ஷா

அந்த பட்டியலில் குறிப்பாக எங்கெங்கெல்லாம் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி சாதகமாக இருக்கிறதோ, அதிமுக காலங்காலமாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்ததோ அந்த எல்லாத்தையும் இப்போது பாஜக கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அமித்ஷாவும், பாஜகவும் நினைப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். தமிழ்நாட்டில் திமுகதான் ஜெயிக்கணும் ஜெயிக்கும் என பாஜகவுக்கு உறுதியாகத் தெரிந்து இருக்கிறது. நம்பர் 2 யார்? எதிர்க்கட்சியாக என்டிஏ கூட்டணியில் அதிமுக வரப்போகிறதா? என்றால் அந்த இடத்தை பாஜகவுக்கு குறி வைக்கிறார் அமித் ஷா. இதுதான் அவருடைய ஒரே இலக்கு.

இதை பாஜக எல்லா இடங்களிலும் செய்திருக்கிறார்கள். அதை குறிப்பாக மகாராஷ்டிராவில் செய்திருக்கிறார்கள். அதையே பீகாரிலும் செய்திருக்கிறார்கள். பாஜகவின் முதல் இலக்கு நம்பர் டூ தான். அதேபோல் தமிழகத்திலும் எதிர்க்கட்சியாக வந்து உட்காருவதுதான் அவர்களது திட்டம். பாஜகவுக்கான தொகுதி லிஸ்டை கையில் கொடுத்துவிட்டு, ‘‘நான் சொல்வதை மட்டும் தான் நீங்கள் கேட்கணும். நீங்க முடிவெடுப்பதை நான் கேட்க முடியாது. எங்களை பற்றி உங்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை’’ என திருச்சியில் வேலுமணியிடம் சொல்லி விட்டு போய் இருக்கிறார் அமித் ஷா.

34
அதிமுக முதுகில் பாஜக சவாரி

அதிமுகவிடம் பாமக கேட்டுள்ள 17 தொகுதிகளுக்கும் அமித்ஷா கொடுத்த பட்டியலுக்கு இடையில் பெரிய பஞ்சாயத்து இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக காஞ்சிபுரம், வட ஆற்காடு மாவட்டத்தில் சில பகுதிகள், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளை பாமக கேட்டுருகிறது. அங்கெல்லாம் வன்னியர் பெல்ட். வன்னியர் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அங்கெல்லாம் வெற்றி வாய்ப்புள்ளது. எளிதாக ஜெயிக்க முடியும் என்கிற தொகுதிகளையும் பாஜக கேட்கிறது. அதிமுக சப்போர்ட்டில் ஜெயிக்கக் கூடிய பகுதிகளையும் பாஜக கேட்கிறது. அதிமுகவுக்கு வரும் வாக்குகளை வைத்து பாஜக வெற்றிபெற நினைக்கிறது.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாதிரியான இடங்களில் வன்னியர் ஓட்டு, அதிமுக ஓட்டு கணிசமாக இருக்கிறது. இப்போது பாஜக அதுபோன்ற தொகுதிகளில் போட்டியிட்டால் வன்னியர்கள் ஓட்டும், அதே போல அதிமுக ஓட்டும் பாஜகவுக்கு முழுமையான பேக்கேஜாக வந்துவிடும். பாஜக, அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்டு வருகிறது. அந்த 60 தொகுதிகளில் குறைஞ்சபட்சம் 40, 45 தொகுதிகளில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என பாஜக நினைக்கிறது. இரண்டாவது மெஜாரிட்டி பெற வேண்டும் என நினைக்கிறது. திமுக ஆட்சி அமைத்தாலும் இரண்டாவது மெஜாரிட்டியாக நாம் இருந்திட வேண்டும். எடப்பாடி இருந்து விடகூடாது. பாஜகவை சார்ந்தவர் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும். அதுதான் பாஜகவின் இலக்காக இருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

44
லீக்கான பாஜக கேட்கும் தொகுதிகள்

3.திருத்தணி

37.காஞ்சிபுரம்

120.கோயம்புத்தூர் (தெற்கு)

6.ஆவடி

56.தளி

121.சிங்காநல்லூர்

8.அம்பத்தூர்

63.திருவண்ணாமலை

127.பழனி

18.துறைமுகம்

76.திருக்கோயிலூர்

134.அரவக்குறிச்சி

20.ஆயிரம் விளக்குகள்

98.ஈரோடு (கிழக்கு)

139.ஸ்ரீரங்கம்

25.மயிலாப்பூர்

100.மொடக்குறிச்சி

141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு)

26.விருதுநகர்

101.தாராபுரம்

151.திட்டக்குடி

31.தாம்பரம்

33.திருப்போரூர்

36.உத்திரமேரூர்

108.உதகமண்டலம்

152.விருத்தாசலம்

113.திருப்பூர் (வடக்கு)

158.சிதம்பரம்

114.திருப்பூர் (தெற்கு)

161.மயிலாடுதுறை

170.திருவிடைமருதூர்

203.ஸ்ரீவில்லிபுத்தூர்

171.கும்பகோணம்

206.விருதுநகர்

173.திருவையாறு

208.திருச்சுழி

181.திருமயம்

211.ராமநாதபுரம்

184.காரைக்குடி

215.திருச்செந்தூர்

186.சிவகங்கை

191.மதுரை வடக்கு

218.கோவில்பட்டி

224.திருநெல்வேலி

193.மதுரை (மத்தி)

230.நாகர்கோவில்

195.திருப்பரங்குன்றம்

231.குளச்சல்

202.ராஜபாளையம்

233.விளவங்கோடு

Read more Photos on
click me!

Recommended Stories