நாம் பல கோவில்களுக்குச் சென்றாலும், சொந்த ராசிக்குரிய கோவிலுக்குச் செல்லும்போதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படும். தடைகள், தோல்விகளைச் சந்திப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்கள் ராசிக்குரிய கோவிலுக்குச் சென்று வழிபடுவது முன்னேற்றத்தைத் தரும்.
உங்களின் அதீத தைரியத்திற்கும், தலைமைப் பண்புக்கும் இன்னும் ஒரு 'பூஸ்ட்' தேவை. நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். வருடத்திற்கு ஒரு முறை சென்று வழிபட்டு வந்தால், இங்கிருக்கும் கடலலைகளைப் போலவே உங்கள் வாழ்க்கையிலும் பாசிட்டிவ் எனர்ஜியும், தடைபடாத பணவரவும் வந்து கொண்டே இருக்கும்!
25
நில ராசிகள் (ரிஷபம், கன்னி, மகரம்):
நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். ஆனால் அதிர்ஷ்டம் கொஞ்சம் எட்டி நிற்கும். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்குத் திறவுகோல் சிறுவாபுரி முருகன் அல்லது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில். இங்கு சென்று நெய் தீபமேற்றி வழிபட்டால், சொந்த வீடு யோகமும், தொழிலில் அசுர வளர்ச்சியும் தேடி வரும்.
35
காற்று ராசிகள் (மிதுனம், துலாம், கும்பம்):
புத்திசாலித்தனம் இருந்தாலும், குழப்பமான மனநிலையால் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்கள் சிந்தனை தெளிவடைந்து, தொழிலில் விஸ்வரூப வெற்றி பெற செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் அல்லது குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு தரும் துளசி பிரசாதம் உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்!
நீங்கள் எமோஷனல் குணம் கொண்டவர்கள். உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை வென்று, வாழ்க்கையில் டாப் கியர் எடுக்க நாமக்கல் ஆஞ்சநேயர் அல்லது ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் செல்லுங்கள். வியாழக்கிழமை இவர்களை தரிசிப்பது உங்கள் கெரியரை உச்சத்துக்கே கொண்டு செல்லும்.
55
வீட்டில் செய்ய வேண்டியது :
எந்த ராசியாக இருந்தாலும், குலதெய்வ வழிபாடும், உங்கள் வீட்டின் அருகே இருக்கும் பழமையான சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடும், சனிக்கிழமை நெய் தீப வழிபாடும் தவறாமல் செய்து வாருங்கள். கிரகங்களின் எதிர்மறை தாக்கங்கள் குறைந்து, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.