சேப்டிபின் ஓட்டைகளுக்கு குட்பை! துணி கிழியாமல் இருக்க 5 சூப்பர் ட்ரிக்ஸ்!

Published : Jun 15, 2026, 01:30 PM IST

சுடிதார், புடவைகளில் சேப்டி பின் குத்துவதால் துணியில் ஓட்டை விழுந்து ஆடை வீணாவது பெண்களுக்குப் பெரும் கவலை. ஆனால், இதைப் தவிர்க்க 5 எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஆடைகள் சேதமடைவதைத் தடுத்து, நீண்ட நாள் புதுசு போலப் பயன்படுத்தலாம்.

PREV
15
நெயில் பாலிஷ் மேஜிக்:

சேஃடிபின்னின் கீழ் வளைவில் துணி மாட்டித்தான் ஓட்டை விழும். பின்னைப் பயன்படுத்துவதற்கு முன், அந்த வளைவுப் பகுதியில் சிறிதளவு டிரான்ஸ்பரண்ட் நெயில் பாலிஷ் (Transparent Nail Polish) தடவி காயவிடுங்கள். இது ஒரு ஸ்மூத் லேயரை உருவாக்கி, துணி மாட்டிக் கொள்வதைத் தடுக்கும்!

25
காது கம்மல் திருகாணி ட்ரிக்:

பழைய கம்மல்களின் ரப்பர் திருகாணிகள் (Rubber Stoppers) உங்களிடம் இருக்கிறதா? சேஃடிபினை துணியில் குத்துவதற்கு முன், இந்த ரப்பர் ஸ்டாப்பரை பின்னுக்குள் நுழைத்து, அதன் பின் துணியில் குத்துங்கள். பின் நகராமல் அப்படியே இருக்கும்; ஓட்டையும் விழாது!

35
'டபுள் சைடு' மார்க்கிங் டேப்:

பட்டுப்புடவை அல்லது நெட்டட் (Netted) சுடிதார் எனில், சேஃடிபினின் கூர்மையான பகுதிக்கு கீழே ஒரு சிறிய துண்டு பேப்பர் டேப் (Paper Medical Tape) அல்லது செல்லோடேப்பைச் சுற்றி விடுங்கள். இது துணியை பின்னின் இடுக்கிற்குள் போகவிடாமல் பாதுகாக்கும்.

45
பீர்சிங் மெத்தட் (The Piercing Method):

பின்னைத் துணியில் ஒரே நேர்கோட்டில் குத்தக் கூடாது. துணியை லேசாக 'ஜிங்-ஜாக்' (Zig-zag) முறையில் இரண்டு முறை ஏற்றி இறக்கி குத்த வேண்டும். இப்படிச் செய்வதால் துணியின் எடை சமமாகப் பிரிக்கப்பட்டு, பின் ஒரே இடத்தில் இழுத்து ஓட்டை போடுவதைத் தவிர்க்கலாம்.

55
தடிமனான பின்னுக்கு 'நோ' சொல்லுங்க:

பல வருடங்களாக பாக்ஸில் இருக்கும் பழைய, மழுங்கிய பின்களைப் பயன்படுத்தவே வேண்டாம். எப்போதும் பிராண்டடான, கூர்மையான எவர்சில்வர் பின்களை மட்டுமே தேர்வு செய்யுங்கள். மொக்கையான பின்கள் துணியின் நூலை அறுத்து பெரிய ஓட்டையை உண்டாக்கிவிடும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories