சமைக்கும்போது எதையும் வேஸ்ட் ஆகாம முழுசா பயன்படுத்த, இல்லத்தரசிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்

First Published | Feb 11, 2023, 5:28 PM IST

வீட்டில் உள்ள காய்கறிகளின் தோலை கூட தூக்கி போடாமல் பயன்படுத்த இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்.. 

சமையலில் ஜீரோ-வேஸ்ட் முறை என்பது சமையலறைகளில் குப்பை போல குவிந்து கிடக்கும் காய்கறி, பழங்களின் தோலை கூட வீணாக்காமல் பயன்படுத்தும் முறையாகும். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். வீட்டையும் பொருளாதார சிக்கல் இன்றி நிர்வகிக்க முடியும். அதை எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம். 

வாழைப்பழம் சாப்பிட்டு முடித்ததும் அதன் தோலை குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் அந்த தோலின் உட்புறம் சருமத்திற்கு நன்மையை கொடுக்கும். சருமத்தை எப்போதும் மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்க்கலாம். பற்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால் பற்கள் வெண்மையாகும். 

Tap to resize

வீட்டில் பயப்படுத்தும் எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரஸ் இயற்கையான சுத்தப்படுத்தியாக உள்ளது. அதனால் எலுமிச்சை சாறு பிழிந்த பின்னர் அதை தூக்கி எறியாமல் சமையலறையை சுத்தம் செய்யலாம். சமையலறையில் உள்ள கறைகள் மீது எலுமிச்சை தோலை தேய்க்கலாம். பேக்கிங் சோடாவை கறையின் மீது போட்ட பிறகும் எலுமிச்சை தோலை கொண்டு தேய்க்கலாம். கறைகளை முற்றிலும் நீக்கும். 

வாழைப்பழத் தோலை போலவே சருமத்திற்கு நன்மையளிக்கும் மற்றொரு சமையலறை கழிவு தான், உருளைக்கிழங்கு தோல். இதன் தோல்களை கண்களின் மேலும், கீழும் மென்மையாக தேய்த்தால் கண்களின் வீக்கத்தை குறைக்கும். கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களைக் கூட குறைக்க உருளைக்கிழங்கு தோல் உதவும். அந்த பகுதியிலும் தேய்க்கலாம். 

ஆரஞ்சு தோல்களை ருசியான மிட்டாய்களைத் தயாரிக்க உபயோகிக்கலாம். ஆரஞ்சு தோல்களுடன் சர்க்கரை சேர்த்து வீட்டிலேயே எளிதாக மிட்டாய் செய்யலாம். உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஆரஞ்சு தேநீர் கூட ஆரஞ்சு தோல்களைப் பயன்படுத்தி செய்யலாம். அதுமட்டுமா ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பின்னர் பொடியாக தயாரிக்கலாம். இந்தப் பொடியை தண்ணீர் அல்லது தயிர் கலந்து முகம் பொலிவு பெற பேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான பலன்களைத் தரும் சுரைக்காயின் தோலை வீணாக்காமல் சட்னியாக அரைக்கலாம். இந்த தோல்களை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை விட்டு தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம், புளிச்சாறு, உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் அரைத்த சுரைக்காய் கூழை சேர்த்து சட்னி செய்து பரிமாறவும். 

சமையலுக்கு சுத்தமாக பயன்படுத்த முடியாத தோல்கள், விதைகளை உரமாக பயன்படுத்தலாம். தோட்டத்தில் செடிகளை வளர்க்க இவற்றை உரமாக போடலாம்.   

இதையும் படிங்க: புருவ மத்தியில் விபூதியை பவித்ரமான இந்த விரலில் தொட்டு வைத்தால் தீவினைகளில் தீரும்.. இது உண்மையா?

இதையும் படிங்க: குடும்ப பெண்கள் செய்யும் இந்த ஒரு தவறால், வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போகிறாள்.. என்ன காரணம் தெரியுமா?

Latest Videos

click me!